நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முகத்தில் மருக்களால் தொல்லையா? எளியமுறையில் விரட்ட சில வழிகள் இதோ...

 பொதுவாக நம்மில் பலருக்கு முகத்தில் அங்காங்கே முகத்தில் மருக்கள் காணப்படும்.

இவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், இவை நமது முகத்தின் அடையாளமாகவே மாறத் தொடங்குகின்றன. இவற்றினால் பல சமயம் நாம் நமது நம்பிக்கையையும் இழக்கிறோம்.

எனினும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் மரு பிரச்சனைக்கு எளிதாக தீர்வு காணலாம். தற்போது அவற்றை பார்ப்போம். 


  • ஒரு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெயில் ஒரு ஸ்பூன் சோடாவை கலந்து, மருக்கள் உள்ள இடத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விடவும். காலையில் சுத்தம் செய்யுங்கள். இப்படி பல நாட்கள் செய்து வந்தால் மருக்கள் மறையும்.

  • அன்னாசி பழச்சாற்றை பஞ்சு கொண்டு மருவின் மீது தடவி அதன் மீது ஒரு துணி கொண்டு கட்டவும். சில மணி நேரம் கழித்து அதை அகற்றி தண்ணீரில் கழுவவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால், மருக்கள் தானே மறைந்துவிடும்.

  • ஒரு வெங்காயத்தை நன்றாக பேஸ்ட் செய்து மருக்கள் உள்ள இடத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து அதை தண்ணீரில் கழுவவும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்யவும். நீங்கள் விரும்பினால், வெங்காய விழுதில் வினிகர் அல்லது உப்பு சேர்க்கலாம்.

  • மருக்களை நீக்க வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு வாழைப்பழத் தோலைத் தடவி ஒரு துணியால் கட்டவும். சிறிது நேரம் கழித்து வாழைப்பழத் தோலை அகற்றவும். இதை தொடர்ந்து செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து மருக்கள் உதிர்ந்து காணப்படும்.    




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!