இடுப்பை சுத்தி நிறைய கொழுப்பு தேங்கியிருக்கா? இதனை எப்படி எளியமுறையில் குறைக்கலாம்?
- Get link
- X
- Other Apps
பொதுவாக நம்மில் பலருக்கு இடுப்பை சுற்றி அதிகளவு கொழுப்பு படிந்து காணப்படும்.
ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு தான் அதிகமாக உண்டாகிறது.
குறிப்பாக கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து நாள் முழுக்க வேலை செசய்பவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாக உண்டாகிறது. எனவே இவற்றை முடிந்தவரை குறைப்பது நல்லது. தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.
உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுக்குமே அடிப்படையில் பிரச்சினையாக இருப்பது இந்த மன அழுத்தம் தான். இவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் தொப்பையைக் குறைக்க வேண்டுமென்றால் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து விடுங்கள். சர்க்கரை பானங்கள், இனிப்பு வகைகள், பழஙகளில் அதிக சர்க்கரை உள்ள பழங்களையும் தவிர்த்துவிடுவது நல்லது.
உடலில் உள்ள தேவையற்ற மற்றும் அதிகப்படியாக கொழுப்பை எரிப்பதற்கு தினசரி முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் தினசரி 40 நிமடங்கள் நடைப்பயிற்சி மட்டுமாவது மேற்கொள்ள வேண்டும்.
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். வீட்டிலேயே செய்த சர்க்கரை சேர்க்காத ஃபிரஷ்ஷான ஜூஸ்களை எடுத்துக் கொள்ளலாம். அல்லது நேரடியாக பழங்களை சாப்பிடலாம். மோர், தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.
உணவின் மீது கவனத்தை செலுத்தி சாப்பிடும்போது செரிமான ஆற்றலும் மேம்படும். அதிகப்படியான கலோரிகள் எடுத்துக் கொள்வதையும் தவிர்க்கலாம். அதிக நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடனேயே இருக்க முடியும்.
ALSO READ : மண்பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவது இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை தருமா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment