நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நடந்தே எடையை குறைக்கலாம்!! ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க வேண்டும் தெரியுமா?

 Walking for Weight Loss: உடல் ஃபிட்டாக இருக்கவும், தொப்பை குறையவும் ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க வேண்டும் என்ற கேள்வி நம் மனதில் அடிக்கடி எழுகிறது. இதைப் பற்றி விரிவாக இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.


  • நடைபயிற்சி உங்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை நல்ல நிலையில் வைத்திருக்கும்.
  • இது உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
  • இதனால் விறைப்பு பிரச்சனை இல்லாமல் இருக்கும்.

உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி: அதிகரித்து வரும் எடையைக் குறைக்க நாம் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதில் வாக்கிங், அதாவது நடைப்பயிற்சியும் ஒன்று. ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க இது ஒரு சிறந்த வழியாகும். தினமும் நடைப்பயிற்சி செய்வதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பை குறைக்க இது பெரிதும் உதவுகிறது. 

காலையிலும், இரவு உணவுக்குப் பிறகும் அடிக்கடி நடைபயிற்சி செய்வது நல்லது. ஆனால் உடல் ஃபிட்டாக இருக்கவும், தொப்பை குறையவும் ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க வேண்டும் என்ற கேள்வி நம் மனதில் அடிக்கடி எழுகிறது. இதைப் பற்றி விரிவாக இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

நடைபயிற்சியால் எடை இழப்பில் கிடைக்கும் நன்மைகள்

தினமும் நடைபயிற்சி செய்தால், உடல் எடையை குறைப்பதும், தொப்பையை குறைப்பதும் எளிதாகிறது. நீங்கள் சிறந்த முடிவுகளை அடைய விரும்பினால், சாதாரண நடைப்பயிற்சிக்குப் பதிலாக வேகமாக நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 8 முதல் 10 மணி நேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு கரோனரி தமனி நோய், மூன்று நாள நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

உடல் செயல்பாடு குறைவதால் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் அதிகரிக்கும். ஆகையால், தினமும் உடலில் இயக்கம் இருப்பதையும், உடல் ஆக்டிவ்வாக இருப்பதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஆய்வில் தெரியவந்துள்ளது

மூன்றரை மாதங்களுக்கு, உணவை மாற்றாமல்,  தினமும் சுமார் ஒரு மணிநேரம் நடைபயிற்சி செய்தால் பெண்கள் தங்கள் தொப்பையை 20 சதவிகிதம் குறைக்க முடியும் என கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆகையால், அனைவரும் அதிக அளவில் நடக்க முயற்சிப்பது நல்லதாகும். ஏனென்றால் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.

ஒரு நாளில் எவ்வளவு நடக்க வேண்டும்?

நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்துக்கான சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும். உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கவும், இதயம் தொடர்பான நோய்கள் வராமல் இருக்கவும் விரும்பினால், நீங்கள் குறைந்தது 10 ஆயிரம் அடிகள் (ஸ்டெப்ஸ்) நடக்க வேண்டும். தினமும் நீங்கள் இப்படி செய்தால், உங்கள் ஆரோக்கியத்தில் பல ஆச்சரியமான பலன்கள் கிடைக்கும். அதன் பலன் சில வாரங்களில் தெரியும்.

நடைபயிற்சியின் மற்ற நன்மைகள்

நடைபயிற்சி உங்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை நல்ல நிலையில் வைத்திருக்கும். இது உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் விறைப்பு பிரச்சனை இல்லாமல் இருக்கும். இது தவிர இது நமது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஆகையால் தினமும் நடைபயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக்கொண்டால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்