20 நாளில் எடையை குறைக்கனுமா? இந்த டயட் சாரட்டை பின்பற்றி பாருங்க.. விரைவில் பலன் தெரியுமா?
- Get link
- X
- Other Apps
பொதுவாக உடல் எடையை குறைக்க உணவிலும் சில பல மாற்றங்களைச் செய்ய வேண்டி கட்டாயம் இருக்கும்.
எனவே உங்களின் உடல் எடை மிகவும் அதிகரித்து, அதைக் குறைக்க நீங்கள் விரும்பினால் பயனுள்ள டயட் சாரட்டை பின்பற்றுவது அவசியம்.
அந்தவகையில் 20 நாளில் எடையை குறைக்க சூப்பரான டயட் சாரட் ஒன்றை இங்கே பார்ப்போம்.
காலை நேர உணவு
ஒரு குவளையில் வெள்ளரியை போட்டு, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சிறிது நேரம் கிளாஸில் அப்படியே விட்டு, பின் அந்த தண்ணீரை குடிக்கவும். இதனை தினமும் காலையில் எழுந்ததும் வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை தண்ணீர் குடிக்கவும். இதை குடிப்பதால், உங்கள் இரத்த ஓட்டம் சீராகி, வாயு, வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகளும் விலகும்.
அதேபோல் காலை உணவில் சாம்பாருடன் மற்றும் தோசை அல்லது இட்லி எடுத்துக்கொள்ளலாம். சிறிது நேரம் கழித்து, கிரீன் டீ குடிக்கவும். காலை 11 மணி அளவில் டீ குடித்தால் உடல் எடை குறையும்.
மதிய நேர உணவு
மதிய உணவில் குறைந்த கலோரி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு, ஓட்ஸ் சப்பாத்தியுடன் ஒரு முழு கிண்ணம் காய்கறிகளை சாப்பிடலாம்.
இதனுடன், உங்கள் மதிய உணவில் தயிர் மற்றும் சாலட்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.
மதிய உணவு சாப்பிட்ட பிறகு, சுமார் 4 மணி கழித்து இளைநீர் குடிக்கவும். இது உடலில் ஏற்படும் தேவையற்ற கலோரிகளை எரிக்க உதவும்.
இரவு நேர உணவு
இரவு உணவில் நீங்கள் காய்கறி போட்டு சூப் செய்து குடிக்கலாம். இதனுடன், கருப்பு பீன்ஸ், ராஜ்மா போன்றவற்றையும் சாப்பிடலாம்.
எடை இழப்புக்கு பீன்ஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது . இந்த உணவில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளதால் இவை உடல் எடையை குறைக்க உதவும்.
ALSO READ : உங்கள் முகத்தை பளிச்சிட வைக்க வேண்டுமா? காஃபி தூளை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment