நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அனைத்துவிதமான சரும பிரச்சினைகளையும் போக்கும் எப்சம் உப்பு ...

 வறண்ட உதடுகள் எப்சம் உப்பால் சரியாகும். எப்சம் உப்பு முகப்பருவை போக்க சிறந்த மருந்து.

எப்சம் உப்பு என்பது மெக்னீசியம் சல்பேட் உள்ளடங்கி இருக்கும் இயற்கையான தாது உப்பாகும். இது சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பில் இருந்து வித்தியாசமானது. சற்று கசப்புத்தன்மை கொண்டது. பல வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது.

தசை வலி, மன அழுத்தம், அஜீரணம், மன அழுத்தம், வீக்கம் போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பதாக நம்பப்படுகிறது. எப்சம் உப்பை நீரில் கரைக்கும்போது இதிலிருக்கும் சல்பேட், மெக்னீசியம் போன்றவை வெளிப்படும். இந்த தாதுக்கள் பல்வேறு உடல் அமைப்புகளின் செயல்பாட்டிற்கு அவசியமானவை. எப்சம் உப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

முகப்பரு, கரும்புள்ளிகள், சரும பொலிவின்மை உள்பட அனைத்துவிதமான சரும பிரச்சினைகளையும் போக்கும் தன்மை எப்சம் உப்புக்கு உண்டு. எப்சம் உப்பைப் பயன்படுத்துவது முகப்பரு மற்றும் தழும்புகள் ஏற்படுவதை தடுக்க உதவும். கரும்புள்ளிகளுடன் சேர்ந்து தூசி, அழுக்கு போன்ற சரும பாதிப்பை அனுபவிப்பவர்கள் எப்சம் உப்பை பயன்படுத்துவது நல்லது.

ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் எப்சம் உப்பை எடுத்துக்கொள்ளவும். அதில் சிறிதளவு பாதாம் எண்ணெய் சேர்க்கவும். இரண்டையும் நன்றாக குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். 

நமது முகத்தில் மிகச் சிறிய துளைகள் உள்ளன. இவற்றில் சேர்ந்திருக்கும் அழுக்கை அகற்ற, எப்சம் உப்பு பயன்படும். அரை டீஸ்பூன் எப்சம் உப்பை முகத்தை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் க்ரீமில் கலந்து முகத்தில் தேய்க்கவேண்டும். பிறகு இதைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். 

இது, முகப்பரு போக்க சிறந்த மருந்து. அதுமட்டுமல்லாமல் அரை கப் எப்சம் உப்பை இளஞ்சூடான ஒரு பக்கெட் நீரில் கலந்துகொள்ள வேண்டும். இதில் பத்து நிமிடங்கள் காலை முக்கி வைத்திருந்தால், கால் அரிப்பு, கால் துர்நாற்றம், கால் வெடிப்பு போன்றவை நீங்கும்.



ALSO READ : இப்படி செய்தால் நீளமான கூந்தல் உறுதி...



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!