நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இரவில் தூக்கம் வர கஷ்டமாக உள்ளதா? படுக்கைக்கு போகும் முன் இதை ட்ரை பண்ணுங்க!

 ஒரு நாளில் ஒரு நபர் சராசரியாக குறைந்தது 7 லிருந்து 8 மணிநேரமாவது நன்றாக தூங்கவேண்டும். அதிலும், இரவு தூக்கம் என்பது மிகமிக அவசியம்.

ஏனெனில் இரவில் உடல் ஓய்வில் இருக்கும்போதும் சில ஹார்மோன்களும், நொதிகளும் தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கும்.

ஆனால், பல்வேறு வேலைப்பளு மற்றும் மன உளைச்சல்களுக்கு நடுவே பலராலும் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. இரவு தூங்கப்போகும் முன் ஒரு ஸ்பூன் தேன் குடிப்பது நல்ல தூக்கத்தை கொடுக்கும் என்கிறார்கள்.

ஏனென்றால், தேன் குடிப்பது பசியை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் எந்தவித இடையூறுமின்றி தூங்கவும் உதவும். பதப்படுத்தப்படாத சுத்தமான தேன் சருமத்தை மெருகேற்றுகிறது.

எனவே, படுக்கைக்கு போவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு சுத்தமான தேனை ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொள்வது, வயிறு நிறைந்திருக்கும் உணர்வை கொடுப்பதுடன், நல்ல தூக்கத்தையும் கொண்டுவரும். உடல் எடையை குறைப்பதில் தேன் டயட் முதன்மையான இடத்தில் இருக்கிறது.

தேன் போன்ற ஃப்ரக்டோஸ் நிறைந்த உணவுகள் கொழுப்பை 10 மடங்கு அதிகமாக எரிக்கிறது. மேலும், கல்லீரலுக்கு தேன் ஒரு எரிபொருள் போன்று செயல்பட்டு குளுக்கோஸ் சுரப்பை தூண்டுகிறது.

தேன் டயட்டை பின்பற்ற விரும்புவோர் சர்க்கரைக்கு பதிலாக முற்றிலும் தேனை பயன்படுத்தவேண்டும். தொடர்ந்து, இரவில் ஒரு ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கி குடித்துவர எடை குறைவதை கண்கூடாக காணலாம்.

இதுமட்டுமின்றி, காயங்களை ஆற்றுதல், தொண்டை கரகரப்பை குணப்படுத்துதல், கிருமிகளிடமிருந்து பாதுகாத்தல், பற்களில் அழுக்கு படியாமல் தடுத்தல், ஒவ்வாமையை எதிர்த்தல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற பல்வேறு குணங்களை கொண்டது தேன்.



ALSO READ : கொரிய பெண்கள் மாதிரி கண்ணாடி சருமம் வேண்டுமா? இந்த 4 பொருட்களே போதும்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்