உடல் எடையை குறைக்க எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?
- Get link
- X
- Other Apps
இரவில் ஒருவருக்கு போதுமான உறக்கம் இருந்தால் பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதோடு உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- சரியாக தூங்காவிட்டால் உடல் எடை குறையாது என்று சில ஆய்வுகள் கூறுகிறது.
- லெப்டின் என்கிற ஹார்மோன் நாம் சாப்பிடும் அளவை கணித்து போதும் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது.
- உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினசரி ஏதேனும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
ஒவ்வொருவரது உடல் ஆரோக்கியத்திற்கு உணவு பழக்கவழக்கம், சுறுசுறுப்பான செயல்முறை போன்றவை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முக்கியமானது நல்ல உறக்கம். ஒருவருக்கு சரியான உறக்கம் இல்லையென்றால் அவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், அறிவாற்றல் குறைவு மற்றும் மனநல கோளாறுகள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்று பல செய்திகளை நாம் கேட்டறிந்திருப்போம். ஆனால் தூக்கத்திற்கும், எடை குறைப்பிற்கும் சம்மந்தம் உள்ளது பற்றி நாம் பெரிதாக கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஒருவரது மோசமான தூக்க பழக்கவழக்கம் ஆரோக்கிய கோளாறுகளை ஏற்படுத்துவதோடு உடல் பருமனடைய செய்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சரியாக தூங்காவிட்டால் அவர்களது உடல் எடை குறையாது என்று சில ஆய்வுகள் கூறுகிறது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment