பயணத்தின் போது பாதியாக பிரிந்த ரயில்..! - இங்கிலாந்தில் அதிகாரிகளை பதறவிட்ட டிக் டாக் யூசரின் வீடியோ...
- Get link
- X
- Other Apps
Viral Video | இங்கிலாந்தில் ரயில் பயணம் செய்த டிக் டாக் யூசர் முதல் முறையாக ரயில் பயணம் செய்த நிலையில், தான் சென்ற ரயில் பாதியிலேயே பிரிந்து போச்சு. தயவு செய்து கொஞ்சம் என்னை காப்பாற்றுங்கள் என்று கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது.
ரயிலில் பயணம் செய்வது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் முதல் முறையாக ரயிலில் பயணம் செல்கிறார்கள் என்றால் சந்தோஷத்துடன் ஒருவித அச்சத்தையும் அனைவருக்கும் ஏற்படுத்தும். எந்த கம்பார்ட்மென்டில் ஏறுவது? ரயில் எந்த பிளாட்பாரத்தில் வரும் என்றெல்லாம் பல யோசனைகள் மனதிற்குள் எழக்கூடும். அதே சமயம் சரியான நேரத்தில் ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டால் அப்பாடா.. என்று அச்சம் எல்லாம் பறந்தோடிவிடும்.
ஆனால் இங்கிலாந்தில் ரயில் பயணம் செய்த டிக் டாக் யூசர் முதல் முறையாக ரயில் பயணம் செய்த நிலையில், தான் சென்ற ரயில் பாதியிலேயே பிரிந்து போச்சு. தயவு செய்து கொஞ்சம் என்னை காப்பாற்றுங்கள் என்று கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானதோடு, இரயில்வே துறை அதிகாரிகளைப் பதற செய்துள்ளது. அப்படி என்ன தான் நடந்தது? வீடியோவில் என்ன சொல்லியிருக்கிறார் டிக் டாக் யூசர் என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.
டிக்டாக் யூசர் ஒருவர், இங்கிலாந்தில் முதல் முறை ரயில் பயணம் மேற்கொள்கிறார். ஒருவித உற்சாகத்தில் பயணம் செய்த இவர் பதிவிட்ட வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் டிவிட்டரில் பதிவிட்ட வீடியோவில் இங்கிலாந்தில் முதன் முறையாக ரயில் பயணம் செய்தேன் எனவும், தற்போது என்னுடைய ரயில் பாதியிலேயே பிரிந்து சென்றது தனக்கு பயத்தை ஏற்படுகிறது. மேலும் மொபைலில் 3 சதவீத பேட்டரி மட்டும் தான் உள்ளது மற்றும் 2 பவுண்ட் பணம் தான் என்னிடம் உள்ளது. தவறான வழியில் செல்வதால் எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள் என்று வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.
இது போன்ற விவாதங்கள் டிவிட்டரில் வெளிவந்த நிலையில், இச்செய்தி ரயில் அதிகாரிகளுக்கும் தெரிய வந்துள்ளது. அப்போது என்ன நடந்தது? என விசாரிக்கையில் ரயில் நிலையத்தில் வெளியான பொது அறிவிப்பை தன்னுடைய ஹெட்போன்கள் காரணமாக தவறிவிட்டிருப்பாரா? என அதிகாரிகள் யூகித்தனர். இதனையடுத்து அதிகாரிகளின் உதவியோடு அவர் எங்கியிருக்கிறார் என கண்டறிப்பட்டது.
பின்னர் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நான் உரிய இடத்திற்கு வந்துவிட்டேன் என்று மீண்டும் டிக் டாக் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் நெட்டிசன்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ALSO READ : உலகின் முதல் Satellite இணைப்பு ஸ்மார்ட் போன் வந்தாச்சு!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment