பாலைவனத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள்... எட்டு மணி நேரப் போக்குவரத்து நெரிசல்... காரணம் இதுதான்....
- Get link
- X
- Other Apps
Burning Man Festival : எரியும் மனிதன் திருவிழாவில் கலந்துகொள்ளவந்தவர்கள் பாலைவனத்தில் 8 மணி நேரம் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டனர்.
அமெரிக்காவில் உள்ள நெவாடா பகுதியில் 9 நாட்கள் எரியும் மனிதன் திருவிழா (Burning Man Festival) என்ற இசை மற்றும் கலாச்சாரம் கலை விழா நிகழ்ச்சியைக் காண வந்தவர்கள் நிகழ்ச்சியின் முடிவில் பெரிய கூட்டமாய் திரும்போது அந்த பகுதி நீண்ட வாகன நெரிசலுக்கு உள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.
நெவாடா பகுதியில் நடக்கும் முக்கிய இசை விழாவான இந்த நிகழ்ச்சியைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்து இருந்தனர். இந்த நிலையில் 9 நாட்கள் நடைபெற்ற விழா நேற்றுடன் முடிவடைந்தது. மக்கள் கூட்டம் மொத்தமாய் தங்கள் பகுதிகளுக்குத் திரும்பும் நிலையில் கருப்பு பாறை பாலைவனம் என்ற பகுதி சாலையில் நீண்ட போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் 8 மணி நேரம் அந்த பாலைவனத்தில் மக்கள் சிக்கிக் கொண்டனர்.
தற்போது அந்த நெரிசலில் சிக்கிய வாகனங்களில் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையைச் சமாளிக்க எரியும் மனிதன் திருவிழா நடத்தும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களே அவர்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டனர். அதில் அனைவரையும் பொறுமையுடன் இருக்கும்படியும் மேலும் மாற்று வழிகளைக் கொடுத்தும் வழி நடத்தினர்.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment