ஹோட்டல் சுவையில் நாவூறும் மொறு மொறுப்பான தோசை - செய்வது எப்படி?
- Get link
- X
- Other Apps
இந்தியர்கள் விரும்பி உண்ணும் ஒரு உணவு என்றால் அது இட்லி, தோசை தான். தோசையில் பல வகை உண்டு.
அந்த வகையில் சுவையான தோசையை எப்படி வீட்டிலிருந்தபடியே செய்வது என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அல்லது இட்லி அரிசி - 200 கிராம்
பச்சரிசி - 200 கிராம்
வெள்ளை முழு உளுந்து - 100 கிராம்
கடலைப் பருப்பு - 25 கிராம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை விளக்கம்
முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, முழு உளுந்து, கடலைப் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை நன்றாக கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த அனைத்தையும் கிரைண்டரில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
நடு நடுவே தண்ணீர்ஊற்றி 20 நிமிடம் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த மாவை 10 மணி நேரம் புளிக்க விடவும்.
அதன் பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லிய தோசையாக வார்த்து எடுக்கவும்.
இந்த சுவையான தோசைக்கு காரசட்னி, தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
ALSO READ : ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கம்பு கேழ்வரகு தேங்காய் புட்டு- செய்வது எப்படி?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment