நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குஜராத், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை தொடக்கம்

 

ஆந்திரா, குஜராத், பஞ்சாப் மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை தொடங்கியது.

ஆமதாபாத்,

உலகம் முழுவதும் பெருத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் தயாராகி விட்டன. இந்த தடுப்பூசிகளை மக்களுக்கு போடும் பணிகளை சில நாடுகள் தொடங்கியும் உள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை வெளிநாடு மற்றும் உள்நாட்டு தயாரிப்புகளான பல தடுப்பூசிகள் சோதனையில் இருக்கின்றன. இந்த தடுப்பூசிகள் மக்களுக்கு போடும் நிலையை விரைவில் எட்டும் என்ற நம்பிக்கையை மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

எனவே இந்த தடுப்பூசியை அதிகமான மக்களுக்கு போடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி விட்டது. இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து விரிவான திட்டம் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் குறைபாடுகளை கண்டறிந்து களைவதற்காக ஒத்திகை நடவடிக்கைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஆந்திரா, குஜராத், பஞ்சாப் மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்த மாநிலங்களில் 2 நாள் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
இதில் ஆந்திராவில், கிரு‌‌ஷ்ணா மாவட்டத்தின் விஜயவாடா, உப்புலுரு, பிரகா‌‌ஷ்நகர், தடிகடப்பா உள்ளிட்ட 5 இடங்களில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்ததாகவும், எந்த குறைபாடும் கண்டறியப்படவில்லை எனவும் மாவட்ட கலெக்டர் முகமது இம்தியாஸ் தெரிவித்தார். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்ட இந்த ஒத்திகை தொடர்பான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

குஜராத்தை பொறுத்தவரை ராஜ்கோட் மற்றும் காந்திநகர் மாவட்டங்களில் இந்த ஒத்திகை நேற்று தொடங்கியது. இதில் முதற்கட்டமாக நேற்று நிர்வாகப்பணிகள் குறித்த ஒத்திகை நடந்தது. அதாவது பயனாளர்களின் விவரங்களை பதிவேற்றுவது, தடுப்பூசியை கையாளுவதற்கான நபர்கள், குளிர் சங்கிலி உள்கட்டமைப்பு சோதனை உள்ளிட்ட பணிகள் நடந்தன.

இதைத்தொடர்ந்து களப்பணிகள் அதாவது தடுப்பூசி போடும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் பயனாளர்களாக 50 சுகாதார பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைப்போல பஞ்சாப்பில் லூதியானா மற்றும் ‌‌ஷகீத் பகத்சிங் நகர் ஆகிய மாவட்டங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்காக லூதியானாவில் 7 மையங்களும், பகத்சிங் நகர் மாவட்டத்தில் 5 மையங்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் தலா 5 டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.
இங்கும் நேற்று நிர்வாகப்பணிகளை மேற்கொண்ட நிலையில் இன்று தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது. இதற்காக ஒவ்வொரு மையத்துக்கும் தலா 25 பேர் பயனாளர்களாக அடையாளம் காணப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி இன்று தடுப்பூசி மையங்களுக்கு அழைக்கப்படுவார்கள்.

அசாமிலும் 2 நாள் தடுப்பூசி ஒத்திகை நேற்று தொடங்கியது. அங்கு நல்பாரி மற்றும் சோனிட்பூர் ஆகிய மாவட்டங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்த மாவட்டங்களில் தலா 5 ஆஸ்பத்திரிகள் மூலம் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது. இங்கும் நேற்று நிர்வாகப்பணிகள் முடிந்த நிலையில், இன்று தடுப்பூசி பணிகள் நடக்கிறது.

இந்த தடுப்பூசி திட்ட ஒத்திகை எந்தவித பிரச்சினையும் இன்றி நடைபெறுவதாக மேற்கண்ட மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!