நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தத பிரிட்டன் அரசு அனுமதியளித்துள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தத பிரிட்டன் அரசு அனுமதியளித்துள்ளது. தயாரித்த கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்த அனுமதியளித்த முதல்நாடு பிரிட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் (எம்ஹெச்ஆர்ஏ) அளித்த அறிக்கையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் தயாரித்த மனிதர்களுக்கு பயன்படுத்தலாம். பாதுாப்பானது, வீரியமாகச் செயல்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இந்தியாவில் சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் அறிவியல் ஆலோசகர் குழுவில் உள்ள அறிவியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில் “ ஆக்ஸ்போர்ட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். இந்த தடுப்பு மருந்தின் விளைவால், 2021-ம் ஆண்டு கோடைகாலத்துக்குள் பிரிட்டனில் ஹெர்ட் இம்யூனிட்டி (மந்தைத்தடுப்பு) பெற்றுவிடுவார்கள். இந்த மருந்தை மக்கள் உடலில் செலுத்தியபின் அவர்கள் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இதுவரை பிரிட்டன் 10 கோடி மருந்துகளுக்கு பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது. அதில் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 4 கோடி மருந்துகள் கிடைக்கும்.

அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் தலைவர் பாஸ்கர் சாரியட் கூறுகையில், “ ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தின் இரு டோஸ்கள் மூலம் வெற்றிக்கான சூத்திரத்தை எங்கள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். விரைவில் இறுதிமுடிவுகள் வெளியாகும். முதல் டோஸைவிட 2-வது டோஸ் வீரியமாக வேலை செய்கிறது. பிரிட்டனில் பரவிவரும் உருமாறிய கரோனா வைரஸுக்கு எதிராகவும் சிறப்பாகச் செயல்படுகிறது” எனத் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்