நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்த ஸ்பா உங்களுக்கு பாம்பு மசாஜ் வழங்குகிறது - Watch

 

எகிப்திய ஸ்பா பாம்பு மசாஜ்களை வழங்குகிறது, வீடியோ நெட்டிசன்களை பயமுறுத்துகிறது..!


எகிப்திய ஸ்பா பாம்பு மசாஜ்களை வழங்குகிறது, வீடியோ நெட்டிசன்களை பயமுறுத்துகிறது..!


இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், எகிப்திய ஸ்பா (Egyptian spa) பாம்பு மசாஜ்களை வழங்குகிறது, வீடியோ நெட்டிசன்களை பயமுறுத்துகிறது. 


இயல்பாக, நாம் ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ் எனப் பல வகையான மசாஜ்களை நாம் கேள்விப் பட்டு இருப்போம். ஆனால் எகிப்து நாட்டில் தற்போது பாம்பு மசாஜ் (snake massage) என்ற ஒரு புதுவகையான மசாஜ்-யை அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. என்ன பெயரைக் கேட்கும்போதே அச்சத்தோடு சிறிது குமட்டலும் சேர்த்துக் கொண்டு வருகிறதா? ஆனால் இந்த மசாஜ் (massages) செய்து கொண்டால் உடலில் உள்ள வலியெல்லாம் காணாமல் போகும் என எகிப்தியர்கள் கூறுகின்றனர்.


VIDEO LINK


எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் (Egyptian spa) தான் புதுவரவாக பாம்பு மசாஜ் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த மசாஜிற்காக டஜன் கணக்கில் பாம்புகளை அள்ளி உடம்பு மேல் வைக்கின்றனர். இந்த பாம்பு கடித்து விட்டால் என்ன செய்வது என்று நமக்குள் பயம் வரலாம். ஆனால் அங்கு பயன்டுத்தப்படும் 28 வகையான பாம்புகளும் விஷமற்றவை தான் என கூலாக பதில் அளிக்கும் மசாஜ் சென்டர் (massage Center) ஊழியர்கள், பயமில்லாமல் அனைவரும் மசாஜ் செய்து கொள்ளலாம் எனக் கூறுகின்றனர்.

மேலும், இந்த மசாஜில் மலைப் பாம்பு முதல் சாரைப் பாம்பு வரை விதவிதமான பாம்புகள் இருக்கிறது. அதோடு உச்சம் கால் முதல் உச்சம் தலைவரை பாம்புகளை உடலில் ஊர விடுவார்களாம். சுமார் 30 நிமிட பாம்பு ஊரலில் உடலில் இருக்கும் ஒட்டுமொத்த வலியும் காணாமல் போய்விடுவதாக பயன்படுத்தியவர்கள் கூறியுள்ளனர். பாம்பு மசாஜ் என்றவுடன் விலை அதிகமாக இருக்கும் என எண்ண வேண்டாம். இந்த மசாஜூக்கு இந்திய மதிப்பில் ரூ 500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்