நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நுரையீரல் அழற்சிக்கான நாட்டின் முதல் தடுப்பு மருந்து அறிமுகம்.


நுரையீரல் அழற்சிக்கான நாட்டின் முதல் தடுப்பு மருந்தை ஹர்ஷ் வர்தன் அறிமுகப்படுத்தினார்

நுரையீரல் அழற்சிக்கான நாட்டின் முதல் தடுப்பு மருந்தை (Pneumococcal Conjugate Vaccine) மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் அறிமுகப்படுத்தினார்.

‘நிமோசில்’ (Pneumosil) எனப்படும் இந்த மருந்தை பில் அண்டு மெலிந்தா கேட்ஸ் ஃபவுண்டேஷனுடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டிட்டியூட் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது.

அதிகp பயன்பாடு மற்றும் இந்தியp பொருளாதாரத்திற்கு அதன் பங்களிப்பைp பொருத்தவரையில் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக சீரம் இன்ஸ்ட்டிட்டியூட் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் விளங்குவதாகக் கூறிய அமைச்சர், 170 நாடுகளில் அந்நிறுவனத்தின் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார்.

உலகில் இருக்கும் மூன்றில் ஒரு குழந்தைக்கு சீரம் இன்ஸ்ட்டிட்டியூட் ஆஃப் இந்தியாவின் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று டாக்டர். ஹர்ஷ் வர்தன் மேலும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா இலட்சியத்தைச் சார்ந்து, கோவிட்-19 பெருந்தொற்று காரணத்தால் அமல்படுத்த பொதுமுடக்கத்தின் போது, நுரையீரல் அழற்சிக்கான தடுப்பு மருந்திற்கான உரிமத்தை சீரம் இன்ஸ்ட்டிட்டியூட் ஆஃப் இந்தியா பெற்றதை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!