நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

1500 ஜியோ மொபைல் போன் டவர்களை சாய்த்த விவசாயிகள்

சண்டிகர், டிச. 29- பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தற்போது ஜியோ செல்போன் டவர்களை குறி வைத்து தாக்கி சேதப்படுத்தி வருகின்றனர். இதுவரை 1500 டவர்கள் சேதமடைந்துள்ளது. இதுபோலசெல் போன் டவர்களையும், தொலைத் தொடர்பு சேவைகளையும் சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் இதுபோன்ற சம்பவங்களில் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மாநிலம் முழுவதும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமாக 9000 செல்போன் சிக்னல் டவர்கள் உள்ளன. அதில் 1500 டவர்கள் இதுவரை சேதப்படுத்தப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் ஜியோ டவர்களை நீக்குமாறு கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!