நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மலச்சிக்கல் பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..

 

ஒருவர் உடலுக்கு உழைப்பு ஏதும் கொடுக்காமல் உண்பது, உட்கார்ந்து வேலை செய்வது என்று இருந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகாமல், நாளடைவில் அது மலச்சிக்கலை உண்டாக்கும்.


மலச்சிக்கல் என்பது பலர் அடிக்கடி அனுபவிக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக குளிர்காலத்தில், உடல் வறட்சிக்கு ஆளாகிறது. இதனால் வழக்கமான குடல் அசைவுகளில் சிரமம் ஏற்படுகிறது. பல காரணங்களால் தினசரி ஆரோக்கியமான குடல் இயக்கத்தை பராமரிப்பதில் ஒருவருக்கு சிரமம் ஏற்படலாம். இருப்பினும் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் காரணம். ஒருவர் உடலுக்கு உழைப்பு ஏதும் கொடுக்காமல் உண்பது, உட்கார்ந்து வேலை செய்வது என்று இருந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகாமல், நாளடைவில் அது மலச்சிக்கலை உண்டாக்கும்.

அதிலும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை சாப்பிடும் ஒருவர் மலச்சிக்கலால் அன்றாடம் அவதியாக நேரிடுகிறது. இந்த மலச்சிக்கல் பிரச்சனையை ஒருவர் ஆரம்பத்திலேயே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், பின் மூல நோய் வரக்கூடும். நீங்கள் மலச்சிக்கலை அனுபவிக்க எத்தனை காரணங்கள் இருந்தாலும், இந்த சிக்கலில் இருந்து வெளிவர உங்களுக்கு உதவ ஏராளமான இயற்கை தீர்வுகள் உள்ளன. இந்த கடினமான நிலையில் இருந்து உங்களை விடுவிக்கும் சில நிரூபிக்கப்பட்ட வீட்டு வைத்தியம் சிலவற்றை பின்பற்றுங்கள் போதும்.

1. தண்ணீர் குடிக்கவும்: ஒருவர் தினமும் போதுமான அளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும். இது மிகவும் எளிமையான ஒன்று. நீரேற்றத்துடன் இருப்பது உங்கள் குடல் அசவுகரியங்களை நீக்கும். கார்பனேற்றப்பட்ட சர்க்கரை நிறைந்த சோடாக்களைப் குடிப்பதற்கு பதிலாக தினமும் போதுமான அளவு நீரைக் குடிப்பது அவசியம். அதுவும் ஒரு டம்பளர் சூடு தண்ணீரில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் எலும்பிச்சை சாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலசிக்கல் பிரச்சனை தீரும். அதேபோல, சூடான பாலில் சிறுது மஞ்சள் கலந்து குடிக்கலாம்.

2. அதிக நார்ச்சத்துள்ள உணவு உட்கொள்ளலை அதிகரிக்கவும்: நீங்கள் போதுமான அளவு நார்ச்சத்தை உட்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதிக நார்ச்சத்துள்ள உணவு இல்லாத நிலையில் மலச்சிக்கல் மோசமடைகிறது. எனவே நீங்கள் தினமும் 25 முதல் 30 கிராம் நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும். பப்பாளி, வாழைப்பழம், ஆரஞ்சு, ஸ்வீட் லைம், பேரிக்காய், பெர்ரி, அவகேடோ போன்ற பழங்களில் உள்ள அதிக நீர் உள்ளடக்கம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவும் செரிமான நொதிகள் உள்ளன.


அதேபோல நட்ஸ்களை உட்கொள்வதை அதிகரிக்கவும். மலச்சிக்கலில் இருந்து விடுபட ஆப்ரிகாட்ஸ், பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றை சாப்பிடலாம். மலச்சிக்கலைக் கட்டுக்குள் வைத்திருக்க நிறைய சாலட், கீரை, முளை கட்டிய பயிறு வகைகள், ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


3. புரோபயாடிக்குகளை போதுமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்: குடல் பாக்டீரியாவின் சமநிலை பாதிக்கப்படும் போது மலச்சிக்கல் ஏற்படுகிறது. குடலில் புரோபயாடிக்குகள் உருவாகும் போது அவை நல்ல பாக்டீரியாக்களை வழங்குவதை உறுதி செய்கிறது. அதன் மூலம் குடலின் சமநிலையை மீட்டெடுக்க முடியும். தயிர் போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள், உங்கள் மலச்சிக்கல் படிப்படியாக தானாகவே தளர்ந்து விடும்.


4. உடற்பயிற்சியை அவசியமாக்குங்கள்: நமது உட்கார்ந்த வாழ்க்கை முறை எண்ணற்ற வழிகளில் நம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அவற்றில் ஒன்று உடல் இயக்கங்கள் குறைக்கப்படுவது. நீங்கள் தொடர்ந்து ஒரு உடற்பயிற்சி முறையைப் பின்பற்றுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விறுவிறுப்பான நடைபயிற்சி, ஜாகிங், ஹான்ட் பிரீ பயிற்சிகள், ஸ்குவாட்டிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் ஆகியவை மலச்சிக்கல் பிரச்சனையை எளிதில் குறைக்கும்.


5. உணவில் இயற்கையான பொருட்களை சேர்த்து சாப்பிடுங்கள்: நெல்லிக்காய், கற்றாழை சாறு, மஞ்சள், எள், ஊறவைத்த சியா விதைகள், ஆளிவிதை, அத்தி போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். மலச்சிக்கலை போக்க திரிபால தூள் அல்லது அதன் சாறு கூட மிகவும் நல்லது.


ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி, உங்கள் அன்றாட திட்டத்தில் மேற்கூறிய அனைத்து வீட்டு வைத்தியங்களையும் போதுமான அளவில் சேர்ப்பதை உறுதி செய்வது நிச்சயமாக மலச்சிக்கலின் வேதனையிலிருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கும்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்