நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இணையத்தில் வைரலாகும் 'கூலி நம்பர் 1' படத்தின் ரயில் காட்சி!

 

கூலி நம்பர் 1 திரைப்படத்தில் அமைந்துள்ள ரயில் பட காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1995ம் ஆண்டில் டேவிட் தவான்  நடித்து சூப்பர் ஹிட்டான  கூலி நம்பர் 1 படம் இப்போது வருண் தவானை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தைப் பற்றித்தான் பலரும் ஆன்லைனில் பரபரப்பாக பேசி வருகின்றனர். இந்த நகைச்சுவைப் படத்திலிருந்து வைரலாகி வரும் ஒரு சிறிய கிளிப்பில், பாலிவுட்டின் முன்னணி நடிகரான வருண், தண்டவாளத்தில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையை காப்பாற்றுவதற்காக நகரும் ரயிலின் மீது ஓடி, குழந்தையை காப்பாற்றுவார்.

இந்த அட்டகாசமான காட்சிதான் இணையத்தில் இப்போது ஹாட். குழந்தையை காப்பாற்ற ரயிலின் மேல் குதித்து ரயிலை விட வேகமாக ஓடி, கண்ணிமைக்கும் நேரத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காமல் குழந்தையை காப்பாற்றுவார்  வருண். .
அந்த வகையில் இன்று நாம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் இயற்பியல் விதிகளை மிஞ்சும் அளவிற்கு இந்த கூலி நம்பர் 1  ரயில் படக் காட்சி அமைந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆன்லைனில் தங்களது கருத்துக்களையும், எமோஜிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ கிளிப் தான் ஆன்லைனில் பரவலான கருத்துக்கள் மற்றும் நகைச்சுவையுடன் பகிரப்பட்டு வருகிறது. இந்த காட்சியை படமாக்கிய பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களை  நெட்டிசன்கள் ஆன்லைனில் மீம்ஸ்கள் வைத்து வறுத்து எடுக்கின்றனர்.
அமேசான் பிரைம் வீடியோவில் வருண் தவான், சாரா அலி கான், பரேஷ் ராவல் மற்றும் ஜாவேத் ஜாஃபெரி ஆகியோர் நடித்த கூலி நம்பர் 1  திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் இந்த ரயில் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!