நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விவசாயிகளுக்கான எனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்"கடைசி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன்"; அன்னா ஹசாரே எச்சரிக்கை

 

விவசாயிகள் தொடர்பான என்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், எனது கடைசி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன் என்று மத்திய அரசுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை, 

விவசாயிகள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். விவசாய செலவு மற்றும் விலை கமிஷனுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இது தொடர்பாக கடந்த 14-ம் தேதியும் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமருக்குக் கடிதம் எழுதினார். தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் எனவும் கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் நேற்று அன்னா ஹசாரே நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகள் பிரச்சினைகளுக்காக கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறேன். ஆனால், மத்திய அரசு அவர்களின் பிரச்சினையை தீர்க்கவில்லை. வெற்று வாக்குறுதிகளை மட்டுமே மத்திய அரசு கொடுத்து வருகிறது. இதன் காரணமாக, மத்திய அரசின் மீதான எனது நம்பிக்கை போய்விட்டது.
என்னிடம் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டார்கள். எனவே, 2021-ம் ஆண்டு ஜனவரி வரை நான் அவகாசம் அளித்திருக்கிறேன். அதன் பின்பும் என்னுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நான் விவசாயிகளுக்காக உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன். அதுதான் என்னுடைய கடைசி போராட்டமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த ஒரு மாதமாக போராடி வருகிறார்கள். இதற்கும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஆதரவு தெரிவித்து உள்ளார்.

மேலும் கடந்த 8-ம் தேதி விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தின்போது 83 வயது அன்னா ஹசாரே அன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!