கலிபோர்னியா சாலைகளில் நடந்து செல்லும் கால்நடை மருத்துவர் ஒருவர் வீடற்றவர்களின் செல்லப்பிராணிகளுக்கு மருத்துவம் பார்க்கிறார்.
- Get link
- X
- Other Apps
கலிபோர்னியா சாலைகளில் நடந்து செல்லும் கால்நடை மருத்துவர் ஒருவர் வீடற்றவர்களின் செல்லப்பிராணிகளுக்கு மருத்துவம் பார்க்கிறார்.
செல்லப்பிராணிகளை தங்கள் குழந்தைகளாகவே வளர்ப்பவர்கள் பலர் உண்டு. வசதிக்கும் அன்புக்கும் தொடர்பில்லை என்பது போல வீடுகள் இல்லாதவர்களும் செல்லப்பிராணிகளை தங்களுடன் வளர்த்து வருவார்கள். சாலையோரங்களில் வசிக்கும் பலர் தங்கள் செல்லப்பிராணிகளுடன் உறங்குவதை பார்க்கலாம். நம் நாட்டைப்போலவே அமெரிக்காவிலும் சாலைகளில் வசிக்கும் வீடற்றவர்கள் பலர் செல்லப்பிராணிகளை அன்புடன் வளர்த்து வருகிறார்கள்.
அந்த செல்லப்பிராணிகளுக்காவே ஒரு கால்நடை மருத்துவர் அமெரிக்காவின் கலிபோர்னியா சாலைகளில் நடந்துகொண்டிருக்கிறார். அவர்தான் வேன் ஸ்டவார்ட். 49 வயதான வேனுக்கு சிறு வயது முதலே விலங்குகள் மீது அன்பு. செல்லப்பிராணிகளை அன்புடன் கவனிப்பது அவருக்கு பிடித்தமான ஒன்று. கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளை தத்தெடுப்பது, வளர்ப்பது என்று வளர்ந்த வேன், பள்ளிப்படிப்பை முடித்ததும் கால்நடை மருத்துவராக ஆனார். தற்போது கலிபோர்னியா சாலைகளில் காலார நடந்து செல்லும் வேன், வீடற்றவர்களின் செல்லப்பிராணிகளுக்கு மருத்துவம் பார்க்கிறார்.
இலவசமாக மருத்துவம் பார்ப்பது மட்டுமில்லாமல் செல்லப்பிராணிகளுக்கு தேவையான மருத்து, உணவு போன்ற தேவைகளுக்கும் உதவி செய்து வருகிறார். பல நேரங்களில் சிலர் வேனைத் தேடி மருத்துவமனைக்கும் வருகின்றனர். செல்லப்பிராணிகளுக்காக தனி நிதி திரட்டும் பக்கத்தை தொடங்கி அதன் மூலம் நிதி சேகரித்து தன்னால் ஆன உதவியையும் வேன் செய்து வருகிறார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment