நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பட்டப்பகலில் சாலையின் நடுவில் இளையர் அடித்துக் கொலை; வேடிக்கை மட்டுமே பார்த்த பொதுமக்கள்

 

சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியிலிருந்து


உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரின் ஆள் நடமாட்டம் மிகுந்த சாலை ஒன்றில் பட்டப் பகலில் இளையர் ஒருவர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள், பாதசாரிகள் எனப் பலரது கண் முன்னே நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை தடுக்கவோ, அந்த இளையரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவோ யாரும் முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தை சிலர் புகைப்படங்கள், காணொளிகள் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றினர்.,

அஜய் என்று அழைக்கப்படும் அந்த இளையரை கட்டையால் இருவர்  கொடூரமாகத் தாக்கியதில் நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்துபோனார் இளையர்.

சம்பவத்தில் உயிரிழந்த அஜய்யின் சகோதரர் சஞ்சய்க்கும் அஜய்யை அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் கோவிந்த் எனும் நபருக்கும் இடையே பழக்கடை வைப்பதன் தொடர்பில் தகராறு இருந்ததாகவும் அதன் தொடர்பில் சஞ்சய் சில நாட்களுக்கு முன்பு போலிசில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

அதனை அடுத்து, இரு தரப்பினரையும் போலிசார் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

கடத்த திங்கட்கிழமை கோவிந்தும் அவரது நண்பர் அமித்தும் சேர்ந்து அஜய்யை கொடூரமாக அடித்ததை காணொளியில் காண முடிந்தது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்