நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு; பெங்களூருவில் 144 தடை உத்தரவு

 

இங்கிலாந்து நாட்டில் புதிதாக உருவாகி உள்ள கொரோனா காரணமாக உலகம் முழுவதும் அச்சம் எழுந்துள்ளது.

பெங்களூரு,

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும் இங்கிலாந்து நாட்டில் புதிதாக உருவாகி உள்ள கொரோனா காரணமாக உலகம் முழுவதும் அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பல்வேறு நாடுகள் மேற்கொள்ள தொடங்கி உள்ளன.

ALSO READ: https://tamildhamakanews.blogspot.com/2020/12/blog-post_402.html

இந்தநிலையில், பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அதாவது, இன்று (டிச 31) முதல் நாளை அதிகாலை 6  மணி வரை பெங்களூருவில்  144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்