குட்பை 2020 : டுவிட்டரில் டிரெண்டிங்
- Get link
- X
- Other Apps
சென்னை : 2020ம் ஆண்டின் கடைசி நாளில் இருக்கிறோம். இதனால் இந்த ஆண்டில் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தும், இந்த ஆண்டிற்கு குட்பை சொல்லியும், புத்தாண்டை வரவேற்றும் பலரும் கருத்து பதிவிடுவதால் டுவிட்டரில் #GoodBye2020, #lastdayof2020, #HappyNewYear2021 உள்ளிட்ட பல ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.
ஒவ்வொரு ஆண்டும் கடந்து போய்க்கொண்டே தான் இருக்கிறது. இந்த 2020ம் ஆண்டு ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு மோசமான ஆண்டாக அமைந்துவிட்டது. காரணம் கொரோனா எனும் கொடிய நோய் உலகை நிலைகுலைய செய்துவிட்டது. லட்சக்கணக்கானோர் இந்த நோயால் இறந்து போயினர். கோடிக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டனர். வீட்டில் முடங்கிய சூழல் எழுந்தது. பொருளாதாரம் பாதித்து, வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த ஊர் செல்லாமல் நடந்து பல ஆயிரம் மைல்கள் தூரம் கடந்து சென்ற பல மக்களை பார்த்தோம். புயலும் ஒருபக்கம் மிரட்டி சென்றது.
இந்தாண்டின் கடைசி நாள் இன்று(டிச., 31, 2020). இதனால் 2020க்கு மக்கள் குட்பை சொல்லியும், புத்தாண்டு நல்லதாக அமைய வேண்டும் என 2021-ஐ வரவேற்றும் மக்கள் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் டுவிட்டரில் இந்த விஷயம் தான் டிரெண்டிங்கில் உள்ளது. பெரும்பாலும் #GoodBye2020, #lastdayof2020, #HappyNewYear2021, #Happy2021, #Year2020 ஆகியவை தான் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின்றன.
2020ம் ஆண்டு தங்களுக்கு எப்படி இருந்தது என்பதை கருத்துக்காக பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக 2020, கொரோனா பாதிப்பு ஆண்டாகத்தான் அமைந்தது. அதனால் அது தொடர்பான விஷயங்கள் தான் டுவிட்டரில் பலரும் கருத்தாக பதிவிட்டு வருகின்றனர். என்னதான் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டாலும், அதேசமயம் ஊரடங்கால் குடும்பத்தினர் உடன் பலரும் நேரத்தை செலவிட முடிந்தது. அந்த சின்ன சந்தோஷத்தையும் பதிவிட்டு வருகின்றனர். சிலர் 2020ல் தாங்கள் சாதித்த விஷயத்தையும், சறுக்கிய விஷயத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.
பொதுவாக புத்தாண்டின் போது ஒவ்வொருவரும் ஒரு புதிய சபதத்தை மேற்கொள்வது வழக்கம். தங்களிடம் உள்ள ஏதாவது ஒரு தீய பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று நினைத்து பலரும் சபதம் செய்வார்கள். அந்தவகையில் 2021ல் நான் இதையெல்லாம் விடப்போகிறேன் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர், ''பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் அன்பையும், நிம்மதியான வாழ்க்கையையும் வாரி வழங்கும் ஆண்டாக அமையட்டும்''. எழுதப்படாத புது அத்தியாயம் தொடங்க இருக்கிறது, முடிந்த வரை மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் மற்றவர்களிடம் விதைத்து நாமும் இனிதாக வாழ்வோம்''. ''2021-ஆம் ஆண்டு அனைவருக்கும் தடைக் கற்களை தகர்த்தெறியும் வெற்றி ஆண்டாக அமையட்டும்''. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..'' என பதிவிட்டுள்ளனர்.
கொரோனாவையும் தாண்டி புயல் உள்ளிட்ட பல இன்னல்களும் இந்தாண்டில் கடந்து போனது. இத்தனை இடர்கள், துன்பங்கள் கடந்து சென்றாலும் மக்களின் நம்பிக்கை மட்டும் குறையவில்லை. தங்கள் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கி இன்பங்கள் வரும், சோகங்கள் நீங்கி சுகங்கள் பெருகும், வரும் ஆண்டாக நல்லதொரு ஆண்டாக அமையும் என நம்புகின்றனர். அதோடு, கொரோனா எனும் கொடிய அரக்கன் நம்மை விட்டு நீங்குவான் என்ற நம்பிக்கையோடு 2021 புதிய ஆண்டை வரவேற்போம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ALSO READ:
உயிருடன் இருந்த விஷப் பாம்பை அப்படியே சுவைத்து உண்ணும் தவளை... இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment