1,800 ரோஹிங்கியா அகதிகள் தொலைதூர தீவுக்கு வெளியேற்றம்
- Get link
- X
- Other Apps
சிட்டகாங் துறைமுகத்திலிருந்து கிளம்பிய கடற்படைக் கப்பலில் காணப் பட்ட ரோஹிங்கியா அகதிகள். ஏழு கப்பல்களில் 1,804 அகதிகள் கண்காணா தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்
இரண்டாம் கட்டமாக ரோஹிங்கியா அகதிகளை நாட்டைவிட்டு வெளியேற்றி தொலைதூர தீவுக்கு அனுப்பும் பணியை பங்ளாதேஷ் நேற்று தொடங்கியது.
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள தாழ்வான பாசான் சார் தீவில் வெள்ளம் சூழும் அபாயம் இருப்பதால் அகதிகளை அங்கு அனுப்ப வேண்டாம் என மனிதநேய அமைப்புகள் விடுத்த வேண்டுகோள்
களையும் மீறி பங்ளாதேஷ் அரசு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
ALSO READ : https://tamildhamakanews.blogspot.com/2020/12/corona.html
ஏழு கப்பல்களில் 1,804 ரோஹிங்கியா அகதிகள் ஏற்றப்பட்டு தீவுக்குக் கொண்டு செல்லப்படுவதாக பங்ளாதேஷ் கடற்படை தளபதி அப்துல்லா அல் மாமுன் சவுத்ரி கூறினார்.
அந்தத் தீவுக்கு முன்னரே சென்று சேர்ந்த அவர், அகதிகளை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தயாராக இருப்பதாகச் சொன்னார். விருப்பத்தின் பேரிலேயே தீவுக்குச் செல்வதாக அகதிகளில் சிலர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினர்.
பங்ளாதேஷ் முதற்கட்டமாக 1,600க்கும் அதிகமான ரோஹிங் கியா அகதிகளை இம்மாதத் தொடக்கத்தில் அந்தத் தீவுக்குக் கொண்டு சென்று அமர்த்தியது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment