நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஹெல்தி- டேஸ்டி இட்லி பொடி: இப்படி தயார் செய்து பாருங்க!

 

இட்லி, தோசை, அடை என டிபன்களுக்கு மட்டுமல்லாது, சாதத்திற்கும் கறிவேப்பிலை பொடியை பயன்படுத்தலாம்.



கறிவேப்பிலை, இரும்புச் சத்து அதிகமான ஒரு உணவுப் பொருள். சாப்பாட்டில் பயன்படுத்திவிட்டு, தூக்கி எறியவேண்டிய பொருள் அல்ல இது என்கிற விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. கறிவேப்பிலையை துவையலாக, ரசமாக, குழம்பாக செய்து சாப்பிடலாம். கூடவே இதில் இட்லி பொடி தயார் செய்து, மாதம் முழுவதும் பயன்படுத்த முடியும்.

இட்லி, தோசை, அடை என டிபன்களுக்கு மட்டுமல்லாது, சாதத்திற்கும் கறிவேப்பிலை பொடியை பயன்படுத்தலாம். அடிக்கடி சாம்பார், சட்னி என செய்யவேண்டிய வேலையை மிச்சப் படுத்துவதுடன், அவசரத்திற்கு கை கொடுக்கும் சைட் டிஷ் இது. சுவையான கறிவேப்பிலை இட்லி பொடி எப்படி தயார் செய்வது? எனப் பார்க்கலாம்.

Curry Leaves Idli Podi Tamil Video: கறிவேப்பிலை இட்லி பொடி

VIDEO LINK


கறிவேப்பிலை இட்லி பொடி செய்யத் தேவையான பொருட்கள் : 

கறிவேப்பிலை – அரை கப்,

 கடலை பருப்பு – 1 டீ ஸ்பூன்,

 உளுந்தம் பருப்பு – 1 டீ ஸ்பூன்,

 மிளகு – அரை டீ ஸ்பூன்,

 காய்ந்த மிளகாய் – 2,

 பூண்டு – 4 பற்கள், 

பெருங்காயத் தூள் – சிறிதளவு,

 எண்ணெய், உப்பு – தேவைக்கு ஏற்ப.

கறிவேப்பிலை இட்லி பொடி செய்முறை :

வாணலியை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலையை கொட்டி வறுக்கவும். பின்னர் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றை கொட்டி வறுங்கள்.

வறுத்த கறிவேப்பிலையை மிக்சியில் கொட்டி அரைக்கவும். பிறகு அதனுடன் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு, பூண்டு, மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும். இப்போது சுவையான கறிவேப்பிலை பொடி ரெடி. எளிதில் கெட்டுப் போகாத இந்த இட்லி பொடியை சில வாரங்கள் வரை வைத்து பயன்படுத்த முடியும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!