நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை பேச்சுவார்த்தை

 

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை (புதன்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில் பங்கேற்க 40 அமைப்புகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

புதுடெல்லி, 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் ஒரு மாதத்தை கடந்திருக்கும் நிலையில், இதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக ஏற்கனவே நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தது. அரசின் அழைப்பை பரிசீலித்த விவசாய அமைப்புகள் நீண்ட ஆலோசனைக்குப்பின் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க சம்மதித்தன.

இந்த பேச்சுவார்த்தையை 29-ந்தேதி (இன்று) நடத்துமாறு மத்திய அரசுக்கு விவசாய அமைப்புகள் கடிதம் எழுதியிருந்தன. மேலும் வேளாண் சட்டங்களை நீக்குவது குறித்த ஆலோசனை போன்றவற்றை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து இருந்தன.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை நாளை (புதன்கிழமை) நடத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. டெல்லி விஞ்ஞான் பவனில் நாளை பிற்பகல் 2 மணிக்கு இந்த பேச்சுவார்த்தையை நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் பங்கேற்குமாறு 40 விவசாய அமைப்புகளுக்கு மத்திய வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் அழைப்பு விடுத்து உள்ளார். இது தொடர்பாக அந்த அமைப்புகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘வேளாண் சட்டங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தர்க்க ரீதியான தீர்வை கண்டடைவதில் அரசு திறந்த மனதுடனும், தெளிவான நோக்கத்துடனும் உள்ளது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து சஞ்சய் அகர்வால் தனது கடிதத்தில், ‘3 வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை, மின்சார திருத்த மசோதா மற்றும் டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான அவசர சட்டம் போன்றவை குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும்’ என்று மட்டுமே கூறியிருந்தார்.

ஆனால் விவசாய அமைப்புகள் நிபந்தனை விதித்திருந்த, 3 சட்டங்களை திரும்பப்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எந்த தகவலும் அதில் இடம்பெறவில்லை.
வேளாண் சட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை 29-ந்தேதி நடத்துமாறு விவசாயிகள் கூறியிருந்த நிலையில், மத்திய அரசு 30-ந்தேதியை தேர்வு செய்துள்ளது. அந்த நாளில் விவசாயிகள் டெல்லியின் சிங்கு, திக்ரி எல்லைகளில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே வேளாண் சட்டங்கள் தொடர்பான முட்டுக்கட்டைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை வெளியிட்டு உள்ளார். கிராமப்புற இந்தியாவின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று மெய்நிகர் முறையில் உரையாற்றிய அவர், இது தொடர்பாக கூறியதாவது:-

புதிய வேளாண் சட்டங்களின் பலன்கள் விவசாயிகளை சென்றடைய தொடங்கி இருக்கின்றன. இதனால் ஏராளமான விவசாயிகள் இந்த சட்டங்கள் குறித்து நேர்மறையாக எண்ணத்தொடங்கி இருக்கின்றனர். ஆனால் சில பிரிவினரிடம் மட்டும் சில குழப்பங்கள் உள்ளன.

அவர்களது சந்தேகங்களுக்கு தெளிவை ஏற்படுத்துவதில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். நாங்கள் அதை அடைவோம்.
இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏனெனில் ஒரு ஜனநாயக நடைமுறையில், பிரச்சினைகளை தீர்க்கும் ஒரே ஆயுதம் பேச்சுவார்த்தையே என்பதில் அரசு நம்பிக்கை வைத்துள்ளது. எனவே இது தொடர்பாக விவசாய அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறோம்.

இந்த பிரச்சினையில் திட்டமிட்டே பொய்கள் பரப்பப்படுகின்றன. போராடும் விவசாயிகளின் மனதில் இந்த சட்டங்கள் தொடர்பாக திட்டமிட்டே சிலர் தவறான கருத்துகளை விதைக்கின்றனர். இது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

பொய்களால் கட்டப்பட்ட இந்த சுவர் ஒருபோதும் வலிமையாக இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சுவர்கள் விரைவில் விழும். மக்கள் உண்மையை உணரப்போகும் காலம் வரப்போகிறது.

இவ்வாறு தோமர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்