நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குஜராத்தில் அறைக்குள் பூட்டிக்கொண்ட 2 சகோதரர்கள், சகோதரி 10 ஆண்டுகளுக்கு பின் மீட்பு

 

பத்தாண்டுகளுக்கு முன் தங்கள் தாய் இறந்ததைத் தொடர்ந்து மனரீதியாக பாதிக்கப்பட்ட அவர்கள், இவ்வாறு தங்களை அறைக்குள் பூட்டிக்கொண்டதாக தந்தை படேல் கூறினார்.

ஆமதாபாத், 

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு வீட்டில், 2 சகோதரர்களும், ஒரு சகோதரியும் அறை ஒன்றுக்குள் தங்களைத் தாங்களே பூட்டிக்கொண்டிருப்பதாகவும், 10 ஆண்டுகளாக அவர்கள் வெளியே வரவில்லை என்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம், தொண்டு நிறுவன ஊழியர்கள் அந்த அறைக் கதவை உடைத்து திறந்தனர். அப்போது அந்த அறை சூரிய வெளிச்சமின்றி இருளாக உள்ளதையும், மனிதக்கழிவுகள், வீணாகிப்போன உணவுகள், காகிதக் குப்பைகள் என்ற அவலமான சூழலில் 3 பேர் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் பரட்டைத் தலையுடன், அழுக்குப் படிந்து பிச்சைக்காரர்களைப் போல காணப்பட்டனர். மிகவும் உடல் நலிவுற்றிருந்த அவர்களால் எழுந்துநிற்கக்கூட முடியவில்லை.

வெளியுலகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் ஒரு அறைக்குள்ளேயே 10 ஆண்டுகளை கழித்துவிட்ட அந்த 2 சகோதரர்களும், ஒரு சகோதரியும், நன்கு படித்தவர்கள் என்று அறிந்தபோது தொண்டு நிறுவனத்தினர் மேலும் அதிர்ந்தனர்.

அந்த மூவரில் மூத்தவரான அம்ரி‌‌ஷ் (வயது 42), வக்கீலாக பணிபுரிந்தவர், சகோதரி மேக்னா (39) எம்.ஏ. உளவியல் பட்டம் பெற்றவர், இளையவரான விஸ் (30), பி.ஏ. பட்டதாரி, வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரராகவும் விளங்கியவர்.

பத்தாண்டுகளுக்கு முன் தங்கள் தாய் இறந்ததைத் தொடர்ந்து மனரீதியாக பாதிக்கப்பட்ட அவர்கள், இவ்வாறு தங்களை அறைக்குள் பூட்டிக்கொண்டதாக தந்தை படேல் கூறினார். அவர்களது அறைக்கு முன் தினமும் தான் உணவை மட்டும் வைத்துவிடுவேன் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது இந்த சகோதரர்கள், சகோதரியின் சிகிச்சை, மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்