ஜப்பான் ஏன் மரத்தில் Satellite உருவாக்குகிறது தெரியுமா?
- Get link
- X
- Other Apps
மரத்தால் செயற்கைக்கோளை உருவாக்க முடியுமா? முயற்சி திருவினையாக்கும் என்கிறது ஜப்பான். மரங்களையே போன்சாயாக மாற்றிய ஜப்பான் காலத்திற்கு ஏற்ப தனது கோணத்தை மாற்றி யோசிக்கிறது.
ஜப்பான் நவீன தொழில்நுட்பங்களுக்கு உடனடியாக மாறும் நாடு. இப்போது விண்வெளி (Space) விஷயத்திலும் தனது கோணத்தை மாற்றி யோசிக்கிறது. ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிறுவனம், கியோட்டோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மரத்தினால் செய்யப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோள்களை உருவாக்கி வருகிறது. இந்த செயற்கைக்கோளை 2023 க்குள் உருவாக்கி சாதனை படைக்கும் ஜப்பான் என்று அந்நாடு நம்புகிறது.
மரங்களின் வளர்ச்சியைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளதாகவும், விண்வெளியில் (Space) மரப்பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்வதாகவும் என்று Sumitomo Forestry என்ற ஆராய்ச்சியாளர், செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார்.
நமது பூமி (Earth) கிரகத்தின் தீவிர சூழல்களில் மரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஆராய்ச்சியாளர்கள் முயற்சிப்பார்கள், பின்னர் அதன் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், முதல் மர செயற்கைக்கோளை (wood satellite) உருவாக்குவதற்கு விரிவுபடுத்துவார்கள். செயற்கைக்கோள்களினால், விண்வெளியில் குப்பை (space junk) தொடர்ந்து அதிகரித்து வருவது ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் விண்வெளி குப்பைகளை (Debris) எவ்வாறு கையாள்வது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றன, இது வளிமண்டலத்தை (atmosphere) அடைத்து, செயற்கைக்கோள்களுக்கு இடையில் விண்வெளியில் மோதிக் கொள்ளும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
செயற்கைக்கோள்கள் தங்கள் குறிக்கோளை அடைந்த பிறகும் விண்வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. இறுதியில் அவை பூமியின் வளிமண்டலத்தில் எரியும்போது, அவற்றின் எச்சங்கள் பூமியில் விழுகின்றன. ஆனால் செயற்கைக்கோள்கள் மரத்தினால் செய்யப்பட்டால், அவை தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை (chemicals) வெளியிடாமல், தரையில் குப்பைகளை வெளியிடாமல் வளிமண்டலத்தில் எரிந்து புகையாய் மாறிவிடும்.
விரைவில், ஆராய்ச்சியாளர்கள் செயற்கைக்கோளின் பொறியியல் மாதிரியை (engineering model) உருவாக்கி, அதன் அடிப்படையில் அவர்கள் மாதிரியை தயாரிப்பார்கள்.
வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களையும், சூரிய ஒளியை எதிர்கொள்ளும் வகையில் மரப்பொருட்களை உருவாக்கும் பணியில் இந்த ஆராய்ச்சி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
தற்போது 2,800 செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றி வருகின்றன. காலாவதியான 3,000 செயற்கைக்கோள்களும் பூமியைச் சுற்றி வருகின்றன.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment