நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்தியாவுடனான மோதல் சீனாவுக்கு நல்லதல்ல; விமானப்படை தளபதி எச்சரிக்கை

 

இந்தியாவுடனான மோதல் சீனாவுக்கு நல்லதல்ல என்று விமானப்படை தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி, 

இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பகதூரியா நேற்று தேச பாதுகாப்பு சவால்கள் மற்றும் விமானப்படையின் பலம் என்ற இணையவழி கருத்தரங்கில் பங்கேற்று பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:- இந்தியா-சீனா இடையிலான எந்த ஒரு தீவிரமான மோதலும் உலக அரங்கில் சீனாவுக்கு நல்லதல்ல. சீனாவின் விருப்பங்கள என்பது உலகளாவியதாக இருந்தால் அது அந்த நாட்டின் திட்டங்களுக்கு உகந்தது அல்ல.
வடக்கில் சீனாவின் நோக்கம் என்னவாக இருக்கிறது? அவர்கள் அங்கு சாதித்ததை நாம் அங்கீகரிக்க வேண்டியது அவசியம். எல்லையில் அதிகளவில் சீனா துருப்புகளை குவித்து இருக்கிறது.அதற்கு எதிராக நாமும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!