நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Google’s gift: பேச்சு குறைபாடு உள்ளவர்களுக்கான App, இனி கண்களால் பேசலாம்!!

 கூகிள் நிறுவனம் சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பேச்சு மற்றும் செயல்பாட்டு சிரமங்கள் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


இந்த செயலி மூலம் இந்த குறைபாடுள்ள பெரும்பாலான மக்களுக்கு Google நிறுவனம் ஒரு பெரிய உதவியை செய்துள்ளது.


‘Look to Speak’ என்ற இந்த செயலி, தொலைபேசியிலிருந்து சொற்றொடர்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை சத்தமாக உச்சரிக்க, பயனரின் கண்களை பயன்படுத்துகிறது. ‘Experiments with Google’ இயங்குதளத்தில் Look to Speak செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை இது போன்ற ஒரு திட்டத்தில் பணிபுரிந்த ஒரு கூகிள் குழுவும், பேச்சு மற்றும் மொழி சிகிச்சையாளர் ரிச்சர்ட் கேவ் லுக்கும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.


“இது ஒரு நபருக்கு மட்டுமல்லாமல் ஒரு சமூகத்திற்கே உதவியை வழங்ககுவதற்கான ஒரு யோசனையுடன் தொடங்கியது. வடிவமைப்பு செயல்முறையின்போது, இது போன்ற ஒரு தகவல்தொடர்பு கருவியால் பயனடையக்கூடிய ஒரு சிறிய குழுவினரை நாங்கள் அணுகி அவர்களது அனுபவம் பற்றி தெரிந்துகொண்டோம்” என்று கேவ் ஒரு வலைப்பதிவு இடுகையில் கூறினார்.


Look to Speak செயலியை பயன்படுத்த, பயனர்கள் தங்கள் தொலைபேசியை நேராக, சீராக வைத்திருக்க வேண்டும். எற்கனவே எழுதப்படுள்ள சொற்றொடர்களை தெர்வு செய்ய, பயனர்கள் கண்கள் கொண்டு இடது, வலது அல்லது மேல் பக்கம் பார்க்க வேண்டும். இந்த சொற்றொடர்கள் அடிப்படை தகவல் தொடர்புக்கானவை. இவற்றில் ஹலோ, நன்றி, கிரேட், ஓ.கே போன்ற அடிப்படை சொற்றொடர்கள் இருக்கும். மேலும், பயனர்கள் மற்றவர்களை கேட்கக்கூடிய பொதுவான கேள்விகள் சிலவும் இதில் இருக்கும். மற்றவரின் பெயர் என்ன, அவர் எப்படி இருக்கிறார், அவர் என்ன செய்கிறார் போன்ற கேள்விகள் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன.


தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்றொடர்கள் செயலியில் சத்தமாக வாசிக்கப்படும். பயனர்கள் தங்கள் உண்மையான குரல் குறிப்புகளை செயலியில் சேர்க்கும் ஆப்ஷனும் உள்ளது. இந்த வழியில் சொற்றொடர்கள் மிகவும் தனிப்பயனாக்கப்படும். சொற்றொடர்களை இடது மற்றும் வலது பக்கங்களிலும் திருத்தலாம். சொற்றொடர்களை கைமுறையாக, அதாவது மானுவலாக திருத்த வேண்டியிருப்பதால் இதற்கு உதவி தேவைப்படும். செயலியை உறக்கநிலையில் (snooze) வைப்பதற்கான ஒரு ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. Look to Speak செயலி, பயனர்களின் கண் பார்வை உணர்திறனை சரிசெய்யவும் அனுமதிக்கிறது.


Look to Speak செயலி Android 9.0 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் இயங்கும் சாதனங்களில் பயனர்களுக்குக் கிடைக்கும். இது தவிர அனைத்து Android One சாதனங்களிலும் இந்த செயலி கிடைக்கிறது.


ALSO READ : 

ஆசியாவின் பெரும்பணக்காரர் ஆனார் தண்ணீர் பாட்டில் நிறுவன அதிபர் சோங் சான்சன்..!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்