ஆணழகன்
அப்பாவிற்கு_அழத்தெரியாது!!
⚽ குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்!
⚽ பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்!
என்னடா வாழ்க்கை இது என
ஒருநாளும்_அழுதிருக்கமாட்டார்!
⚽ மனைவியை நெஞ்சில் சுமந்து!
⚽ பிள்ளைகளை தோளில் சுமந்து!
⚽ குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து!
போகும் வழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்ற போதும்!
தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!
நாம்_அவரை_கல்லெனவே நினைத்துவிட்டோம்!
⚽ அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்!
⚽ அப்பாவிடம் எட்டி நிற்போம்!
⚽ முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள்
சொற்பம் என்போம்!
ஆனால்,
தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்!
நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்!
தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் ததும்பும்_ஜீவன்_அது!
⚽ நாம் திண்ணும் சோறும்!
⚽ உடுத்தும் உடையும்!
⚽ படித்த படிப்பும்!
அப்பாவின் வேர்வையில்தான் என
ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டிதில்லை!
நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்!
ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்!
அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம்!
அப்பாவின்_பாசத்தை_உணரக்கூட இல்லையோ!
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
அவரே உயரமானதாக உணர்வார்!
வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்!
நம் வாழ்க்கையின் பின்னால்…
அப்பா_எப்போதுமே_இருப்பார்!
⚽ அப்பாவிற்கு பாசத்தை வெளிபடுத்த
தெரியாது!
⚽ அப்பாவிற்கு கொஞ்ச தெரியாது!
⚽ அப்பாவிற்கு போலியாய் இருக்க தெரியாது!
⚽ அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது!
⚽ அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள தெரியாது!
⚽ அந்த_பைத்தியத்திற்கு
அழவும்_தெரியாது!
⚽ வளர்த்த கெடா மாரில் பாய்ந்த போதும்!
ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்!
முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்! அவர் அழுதவரில்லை!
நம்_சந்தோசத்திற்காகவே_எதையும் தாங்கும்_ஆன்மா_அவர்!
⚽ பாசமோ!
⚽ மன்னிப்போ!
⚽ அழுகையோ!
உணர்வுகளை அவரிடம் உடனே வெளிப்படுத்தி விடுங்கள்!
🏀 ஒருவேளை உங்கள் நண்பனின் அப்பா
மரணமோ!
🏀 உங்கள் அப்பா வயதுடைய யாரோ
ஒருவரின் மரணமோ!
🏀 உங்களை புரட்டி போட்டு!
அவர் பாசம் புரிந்து!
அப்பாவை தேடி ஓடிரும்போது!
🏀 வீட்டில் அப்பா…
சிரித்துக்கொண்டிருக்கலாம்…
புகைப்படத்தில்!!
பாவம்_அவருக்குதான்..
அழத்தெரியாதே!
Comments
Post a Comment