8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தோல்வியை சமன் செய்தது இந்தியா; ஆட்ட நாயகனாக அணித்தலைவர் ரகானே
- Get link
- X
- Other Apps
இந்திய அணித் தலைவர் அஜிங்க்யா ரகானே அடித்த பந்தைத் தவறவிட்ட ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக இந்திய அணித் தலைவர் அஜிங்க்யா ரகானே தேர்வு பெற்றார்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் இந்தத் தொடர் தற்போது 1-1 என்ற சமநிலையை எட்டியுள்ளது.
சொந்தக் காரணங்களுக்காக விராத் கோலி நாடு திரும்பியதை அடுத்து இரண்டாவது போட்டியில் ரகானே இந்திய அணிக்கு தலைமை ஏற்றார்.
இன்று நடைபெற்ற 4ஆம் நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி வெற்றி பெற 70 ஓட்டங்கள் தேவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டிப் பிடித்தது இந்திய அணி.
முன்னதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு ஆஸ்திரேலிய வீரர்களை நிலைகுலைய வைத்தது. இளம் வீரர் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில் சதமடித்த ரகானே இரண்டாவது இன்னிங்சிலும் பொறுப்புடன் விளையாடி 27 ஓட்டங்கள் எடுத்தார். அணியைச் சிறப்பாக வழிநடத்தியதுடன் வெற்றிக்குத் தேவையான ஓட்டங்களையும் எடுத்த ரகானேவுக்கு ஆட்ட நாயகன் விருது அறிவிக்கப்பட்டது.
முதல் இன்னிங்ஸில் சதமடித்த ரகானே இரண்டாவது இன்னிங்சிலும் பொறுப்புடன் விளையாடி 27 ஓட்டங்கள் எடுத்தார். அணியைச் சிறப்பாக வழிநடத்தியதுடன் வெற்றிக்குத் தேவையான ஓட்டங்களையும் எடுத்த ரகானேவுக்கு ஆட்ட நாயகன் விருது அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தப் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடதுகை பேட்ஸ்மேன்களை அதிக எண்ணிக்கையில் ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின்.
இலங்கைப் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 191 முறை இடது கை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அதை அஸ்வின் முறியடித்துள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 7ஆம் தேதி சிட்னியில் நடைபெற உள்ளது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment