நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

புவி வெப்பமடைதலின் பாதிப்பை நிரூபிக்கும் வகையில் நிகழ்ந்த 10 சம்பவங்கள்.. இயற்கை எப்படி எச்சரிக்கிறது?

 

பூமியில் உயரும் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை பூமி வேகமாக வெப்பமடைவதைக் காட்டும் ஆதாரங்களாக உள்ளன.


புவி வெப்பமடைதல் குறித்து நாம் பல ஆண்டுகளாக கேள்விப்பட்டிருக்கிறோம். இதனால் நம் எதிர்கால வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வானிலையாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். புவி வெப்பமடைதல் என்பது உண்மையானது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை ஆராய்வதற்கு முன் புவி வெப்பமடைதல்  என்ன என்பதை முதலில் புரிந்துகொள்வோம்.

புவி வெப்பமடைதல் என்பது இன்று மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட க்ரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகரிப்பதால், பூமி இயல்புக்கு மாறாக வெப்பமடைவதே புவி வெப்பமடைதல். கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. 
இந்தக் காலத்தில் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதைபடிம எரிபொருள்களை அதிக அளவில் பயன்படுத்துவதாலும், காடழிப்பும் க்ரீன் ஹவுஸ் வாயுக்களின் அளவை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம். அதேபோல, புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம், வனவிலங்குகளின் அழிவு, ஓசோன் குறைதல், ஒரு சிலவற்றைக் குறிப்பிடுவது நவீனகால சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணங்கள். உயரும் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை பூமி வேகமாக வெப்பமடைவதைக் காட்டும் ஆதாரங்களாக உள்ளன.


1.உலகளவில் அறிவியலாளர்களின் ஒருமித்த கருத்து:

உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்த ஒருமித்த கருத்தை முதன்மையாக மனிதனால் ஏற்படும் செயல்பாட்டின் விளைவாக ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மனிதர்களின் செய்யப்பட்டால் வளிமண்டலத்தில் அதிக கிரீன்ஹவுஸ் வாயுக்களை வெளியாகிறது என தெரிவித்துள்ளனர்.
2.ஐ.நா. ஐ.பி.சி.சி அறிவிப்பு"காலநிலை அமைப்பை வெப்பமயமாக்குவதற்கான அறிவியல் சான்றுகள் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளன" என ஐ.நா. ஐ.பி.சி.சி அறிவித்தது.

3.2019-ஆம் ஆண்டு இரண்டாவது வெப்பமான ஆண்டு

நாசாவின் கூற்றுப்படி, 2019ம் ஆண்டில் சராசரி உலக வெப்பநிலை 20ம் நூற்றாண்டின் சராசரியை விட 1.8 டிகிரி F (0.98 டிகிரி செல்ஸியஸ்) அதிகரித்துள்ளது.

4.வெப்ப மண்டலத்தின் வெப்பநிலை அதிகரிப்பு

வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு ட்ரோபோஸ்பியர் என்று அழைக்கப்படுகிறது, அங்கு விமானங்கள் பறக்கின்றன. இது புவி வெப்பமடைதலில் மனித செயல்பாட்டை நிரூபிக்கிறது.

5.ஈரப்பதம் அதிகரிப்பது அதிக வெப்பமயமாதலை ஏற்படுத்துகிறது

நீராவி ஒரு கிரீன்ஹவுஸ் வாயு ஆகும். கோடைகாலத்தில் காற்றில் அதிக அளவு நீராவி இருப்பதால் கூடுதல் வெப்பமயமாதலை ஏற்படுத்துகிறது.
6. கடல் மட்ட உயர்வு

அதிக கடல் நீர் வெப்பநிலை நீரின் வெப்ப விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாசாவின் கூற்றுப்படி, தற்போதைய கடல் உயர்வு விகிதம் ஆண்டுக்கு 0.13 ஆகும், இது கடல் மட்ட உயர்வு துரிதப்படுத்துவதைக் குறிக்கிறது.

7. கடல் மேற்பரப்பு வெப்பமடைகிறது

கடந்த மூன்று தசாப்தங்களில், 1880ம் ஆண்டில் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாக உள்ளது என தெரியவந்துள்ளது.

8. ஆர்க்டிக் கடல் பனி உருகுதல்

ஒவ்வொரு ஆண்டும் கடல் பனியால் மூடப்பட்ட பகுதி உருகி வருகிறது. சராசரியாக ஒரு தசாப்தத்திற்கு 3.2% பனி வீழ்ச்சியடைந்து வருகிறது.

9. சராசரி வெப்பநிலை உயர்வு
சராசரி உலக வெப்பநிலை 1.4-பாரன்ஹீட் டிகிரி அதிகரித்துள்ளது.

10. 20-ஆம் நூற்றாண்டின் இரண்டு வெப்பமான சதாப்தங்கள்

காலநிலை ஆய்வுகளின்படி, கடந்த 400 ஆண்டுகளில் 20ம் நூற்றாண்டின் கடைசி 20 ஆண்டுகள் அதிக வெப்பமான சதாப்தங்களாக கருதப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!