நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தஞ்சை மாணவன் அசத்தல்..! வாயைப்பிளந்த அமெரிக்கா..!

அமெரிக்காவை சேர்ந்த I Doodle Learning நிறுவனம், அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா உடன் இணைந்து Cubes in Space என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை நடத்தியது. இந்த போட்டியில் 73 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் தஞ்சை அடுத்த கரந்தை பகுதியை சேர்ந்த ரியாஸ்தீன் என்ற கல்லூரி மாணவரும் கலந்து கொண்டார். தனியார் கல்லூரியில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ரியாஸ்தீன், உருவாக்கிய 2 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ நாசா தேர்வு செய்துள்ளது.
விஷன் சாட் V1 மற்றும் V2 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைகோள்கள் 33 மில்லி மீட்டர் உயரமும், 33 கிராம் எடையையும் கொண்டுள்ளது. உலகிலேயே மிகவும் எடை குறைவான இந்த இரு செயற்கைகோள்களும், 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் சோதனை செயற்கைகோள்களில், 11 சென்சார்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் விண்வெளியில் இருந்து பல வகையாக தகவல்களை அறியலாம் என்றும் ராக்கெட்டில் ஏற்படும் காஸ்மிக் கதிர்களின் தன்மை பற்றி தெரிந்து கொள்ளலாம் எனவும் ரியாஸ்தீன் தெரிவித்துள்ளார்.

மேலும் செயற்கைகோள்களுக்கு தேவையான, மின் சக்தியை செயற்கைக்கோளின் மேற்புறத்தில் உள்ள சோலார் செல்களில் இருந்து பெற முடியும் என்றும் அவை இரண்டையும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நாசாவில் சவுண்டிங் ராக்கெட் விண்ணில் செலுத்த உள்ளதாகவும் ரியாஸ்தீன் கூறினார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!