ராட்சத ராட்டினத்துடன் அதிஅற்புத சொகுசுக் கப்பல்
- Get link
- X
- Other Apps
ரோலர் கோஸ்டர் வசதியுடன் ‘மார்டி கிராஸ்’.
ஹெல்சிங்கி: ஒரு பக்கம் குளிர்காலம், இன்னொரு பக்கம் உலகை ஆட்டிப்படைக்கும் கொள்ளைநோய். இரண்டுக்கும் இடையே, ஃபின்லாந்து நாட்டு கப்பல் பட்டறை ஒன்றில் சிப்பந்திகள் சொகுசுக் கப்பலில் ராட்சத ராட்டினம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேறோர் இடத்தில், சொகுசுக் கப்பலில் பயணம் செய்யக்கூடிய 6,500 பயணிகளைக் குளிர்விக்க கடல்நீரை சுத்திகரித்து அதிலிருந்து பியர் தயாரிக்கும் பணியில் மற்ற ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இப்பொழுது இந்தக் கப்பலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நிறைவடைந்துள்ளன. ‘மார்டி கிராஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள கார்னிவல் குருஸ் லைன் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான இந்தக் கப்பல் சொகுசுப் பயணத்துக்கு தயார்நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கேள்வி எல்லாம் அமெரிக்காவின் நோய்க் கட்டுபாடு, தடுப்பு மையம் எப்பொழுது இதுபேன்ற சொகுசுக் கப்பல்களை கடற்பயணம் மேற்கொள்ள அனுமதிக்கும் என்பதே.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது கரீபிய கடற்பகுதியில் தனது பயணத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளது ‘மார்டி கிராஸ்’.
ஆனால், கொள்ளைநோயை எதிர்கொள்ளும் தயார்நிலையில் இருக்கும் வண்ணம் கப்பல் இருப்பதை உறுதி செய்ய அதற்கான பல்வேறு சான்றிதழ்களை அது பெற்றாக வேண்டும் என்று அமெரிக்க நோய்க் கட்டுபாடு, தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. எனினும், அந்த சான்றிதழ்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று என மையம் இன்னமும் அறிவிக்கவில்லை.
நிலைமை இவ்வாறிருக்க, ெகாள்ளைநோயால் சிக்கித் திணறும் நாடுகள் தங்கள் நாட்டு எல்லைகளை மூடி வைத்திருப்பதும், இதுவரை பயணங்கள் மேற்கொண்டுள்ள சொகுசுக் கப்பல்கள் ஒன்று கொள்ளைநோயால் பீடிக்கப்பட்ட பயணிகளுடன் வந்துள்ளன அல்லது அதில் பயணம் மேற்கொண்டுள்ள பயணிகளுக்கு அந்த நோய் தொற்றியிருக்குமோ என்ற பீதியைக் கிளப்பியுள்ளன.
ஆனால், ஒன்றுமட்டும் திண்ணம். இந்த சொகுசுக் கப்பல் எப்பொழுது தனது பயணத்தை தொடங்கினாலும் 2021ஆம் ஆண்டின் அதிஅற்புதமான சொகுசுக் கப்பலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்கிறது புளூம்பெர்க் செய்தித் தகவல்.
ALSO READ : https://tamildhamakanews.blogspot.com/2020/12/10_29.html
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment