நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ரஜினி அறிவிப்பால் ஜோதிட தொழிலை கைவிடுகிறாரா ஷெல்வீ… கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்…

 


நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் தான் பார்த்து வரும் ஜோதிட தொழிலை விட்டு விடுகிறேன் என பிரபல ஜோதிடம் ஷெல்வி கூறும் வீடியோ தான் தற்போதைய ட்ரெண்டிங்…

ஒருவழியாக கால் நூற்றாண்டு கால நேரடி அரசியல் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் நடிகர் ரஜினிகாந்த். ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்த அவர், திடீரென ஏற்பட்ட உடல்நிலை பின்னடைவு காரணமாக கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ரஜினியின் அரசியல் வருகை குறித்து பிரபல ஜோதிடர் ஷெல்வி கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக உள்ள அவர் தான்,  3 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி நிச்சயம் அரசியலில் களம் காண்பார் என முதன்முதலில் சொன்னவர்.

மேலும் அவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் ஜோதிட தொழிலை கைவிடுவதாகவும் அவர் சவால் விடுத்திருந்தார். இவர் இதற்கு முன்னால் கூறிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த போது பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்ற கணிப்பும், 2020 ஆம் ஆண்டு சிறப்பாக அமையும் என்ற கணிப்பும் பொய்த்துப் போனது.

ALSO READ : https://tamildhamakanews.blogspot.com/2020/12/blog-post_929.html

LINK

இதனால் இணையவாசிகளால் அதிகம் விமர்சிக்கப்பட்டார். ஆனால் ரஜினி குறித்து கூறிய தகவல்கள் டிசம்பர் மாதத்தில் வெளியான அரசியல் அறிவிப்பு வரை ஒத்துப்போனதை கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். ஆனால் நேற்று வெளியான ரஜினியின் அறிவிப்பு அவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை தான் கணித்தது எதுவுமே நடக்காததால், தன்னுடைய கணிப்பு தவறிவிட்டது என அவர் ஒத்துக்கொள்வாரா? இல்லை சொன்னபடி தான் பார்த்து வரும் ஜோதிட தொழிலை விட்டு விடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

VIDEO LINK



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!