நீங்கள் உங்கள் வேலையை கடினமானது என நினைத்தால், இந்த மருத்துவர் செய்யும் வேலையை பாருங்கள்..!நீங்கள் உங்கள் வேலையை கடினமானது என நினைத்தால், இந்த மருத்துவர் செய்யும் வேலையை பாருங்கள்..!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், யானையின் மலச்சிக்கலை தீர்க்க போன டாக்டருக்கு ஏற்பட்ட சம்பவத்தின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக (Viral) பரவ, நெட்டிசன்கள் பலரும் தங்கள் வேலையின் மீது புதிய மரியாதை வந்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
நாம் அனைவரும் ஒருகட்டத்தில், எங்கள் வேலை (Job) கடினமானது எனவும், சலிப்பை ஏற்படுத்துகிறது எனவும் புகார் செய்ய துவங்கிவிடுவோம். உங்கள் எண்ணங்களை விடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லிவிடுங்கள். ஏனென்றால், சிலரது வேலை மிகவும் வெட்கக்கேடாக இருக்கும்.
உதாரணத்துக்கு, டாக்டர் டாம் என்ற கால்நடை மருத்துவரை (Veterinary Doctor) எடுத்துக் கொள்ளுங்கள். உடனே நீங்கள், அவரது வேலை அழகான விலங்குகளை கையாள்வது, நாய்கள், பூனைகளை வளர்ப்பது என நினைக்கலாம். ஆனால் அதுமட்டும் அவரது பணியல்ல. வடக்கு தாய்லாந்தின், சியாங் மாயில் உள்ள, யானை பூங்காவிலிருக்கும், லானா என்ற யானைக்கு மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளது.
யானைக்கு (Elephant) சிகிச்சை அளிக்க, டாம் அங்கு அனுப்பப்படுகிறார். அவரது சிகிச்சையில், யானை நிம்மதி பெருமூச்சு விட்டது. ஆனால் டாமுக்கு ஏற்பட்டதோ துயரம். யானையின் மலச்சிக்கலை தீர்த்த அந்த நொடி, அவரது முகத்தில் யானையின் கழிவுகள் பீச்சி அடிக்கப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதும், பலரும் தங்கள் வேலைக்கு புதிய மரியாதை தருவதாக கருத்து பதிவிட தொடங்கினர். யானைக்கு உதவிய டாக்டரின் அர்ப்பணிப்பையும் அவர்கள் பாராட்டினர்.
நம்மில் பலரும் யானைக்கு அருகே நிற்கக்கூட பயப்படுவோம்.. ஆனால், டாக்டர் டாம், அனைத்துக்கும் தைரியாக இருந்தார். உங்கள் கால்நடை டாக்டர்களிடம் நீங்கள் கேட்டால், அவர்கள் இதுபோல் பல கதைகளை கூறுவார்கள், விலங்குகளை கையாளும் போது, கடிவாங்கியது, நகக்கீறல்களால் பிராண்டியது உள்ளிட்டவற்றுடன் அவர்கள் பணி சென்று கொண்டிருக்கும்.
Comments
Post a Comment