வீணாகும் பொருட்களில் விதவிதமான ஆடைகள் தயாரித்து அசத்தும் தைவான் ஆடை வடிவமைப்பாளர்
- Get link
- X
- Other Apps
வீணாகும் பொருட்களில் விதவிதமான ஆடைகள் தயாரித்து தைவான் ஆடை வடிவமைப்பாளர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
தைவானில் வீணாகும் பொருட்களைக் கொண்டு விதவிதமான ஆடைகளை உருவாக்கி பெண் ஆடை வடிமைப்பாளர் வாங் லி லிங் அசத்தியிருக்கிறார். பழைய மின்சார வயர்கள், போல்ட்கள் என கையில் கிடைத்ததை எல்லாம் சேகரிக்கும் வாங் லி லிங், அவற்றை நவநாகரிக ஆடைகளாக மாற்றுகிறார்.
இதற்காக இருபது அல்லது முப்பது வருடங்கள் பழமையான பொருட்களைப் பயன்படுத்தியிருப்பதாக அவர் கூறுகிறார். பத்து வருடங்களுக்குக் குறைவான எந்தப் பொருளையும் இந்த ஆடையை உருவாக்க, தான் பயன்படுத்தவில்லை என்கிறார் அவர். பல்லாண்டுகள் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களின் தோற்றம், புதிதாக வாங்கப்படும் பொருட்களைக் காட்டிலும் வித்தியாசமான வண்ணத்தில் இருக்கும் என்று கூறும் வாங் லி, வீணான பொருட்களின் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடைகளை வைத்து பேஷன் ஷோ நடத்தி இருக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பேஷன் ஷோவில் கலந்துகொண்ட தைவான் ஆண்ட்ரூ சென் இதுகுறித்து கூறுகையில், ஒரு தைவான் ஆடை வடிவமைப்பாளர் இப்படி பழைய பொருட்களை மறுசுழற்சி செய்து புதுமையான ஒரு யோசனையை நடைமுறைப்படுத்தியிருப்பதை முதன்முறையாக காண்கிறேன் என்றார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment