நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் - கல்வி அமைச்சர் திட்டவட்டம்

 

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயமாக நடத்தப் படும் என்றும், பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை என்றும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திட்ட வட்டமாக கூறினார்.

சென்னை, 

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கின்றன. நடப்பு கல்வியாண்டுக் கான வகுப்புகள் ஆன்- லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் நடைபெறுமா? மாணவர்களுக்கு இறுதித்தேர்வு எப்படி நடக்கும்? 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
எந்தவித கல்வி நடவடிக்கைகளும் நடைபெறாத ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக கருதப்படும் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டு பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்கப்படுமா? என்றெல்லாம்கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில் இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சில தெளிவுகளை தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் நேற்று மினி கிளினிக் தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

அண்டை மாநிலங்களில் பள்ளிகளை திறந்தவுடன் மீண்டும் மூடி இருக்கின்றனர். பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர், கல்வியாளர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு இருக்கிறது. அருகில் உள்ள மாநிலங்களில் நிலவும் சூழலை பொறுத்து பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.

நடப்பு கல்வியாண்டில் பாடத்திட்டம் குறைக்கப்பட்ட போதிலும், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயமாக நடக்கும். முதல்-அமைச்சருடன் ஆலோசித்து பொதுத்தேர்வு தொடர்பான அட்டவணை வெளியிடப்படும்.
நடப்பு கல்வியாண்டு பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்கப்படாது. அதற்கான வாய்ப்பு இல்லை.மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தாலும் மிதிவண்டிகள், மடிக்கணினிகள் வழங்கப்படும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து திருவள்ளுவர் காவி உடை அணிந்ததுபோல கல்வி தொலைக்காட்சியில் வெளியான காட்சி பெரும் சர்ச்சைக்குள்ளானது. அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதுபற்றி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘பேராசிரியர் ஒருவரின் தவறால் அப்படி இடம்பெற்றுவிட்டது. தவறுக்கு காரணமான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது’ என்றார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!