புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை: டெல்லியில் 2 நாள் இரவு நேர ஊரடங்கு அமல்
- Get link
- X
- Other Apps
டெல்லியிலும் இரவு நேர புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களல் டெல்லியும் ஒன்று. டெல்லியில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை இந்த வைரஸ் தொற்றால் 10 ஆயிரத்து 523 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து பரவி வரும் உருமாற்றம் பெற்ற கொரோனா இந்தியாவிலும் கால் பதித்து உள்ளதால் மேலும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 8 பேரின் மாதிரி டெல்லி ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்களல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், டெல்லியிலும் இரவு நேர புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்காக மக்கள் கூடுவதை தடுக்க இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 6 மணி வரையும், நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 6 மணி வரையும் என 2 நாட்கள் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன்படி இரவு நேரத்தில் பொது இடங்களில் 5 பேருக்கு மேற்பட்டோர் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
தனி நபர் நடமாட்டம் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இரவு நேர ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
ALSO READ :
Happy new year 2021 : மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்துக்களை பகிருங்கள்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment