நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ; 4-ந்தேதி அடுத்தசுற்று பேச்சு

 

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்டுள்ளது. 2 அம்சங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கடந்த செப்டம்பர் மாதம் 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.

இந்த சட்டங்கள், விவசாயிகளுக்கு லாபத்தை அதிகரிக்கும், வாய்ப்புகளை பெருக்கும், தொழில்நுட்பங்களை கொண்டு வரும், இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் விளைபொருட்களை தங்கள் விருப்பப்படி எங்கும் விற்க வழிவகுக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது.
விவசாயிகள் அச்சமும், போராட்டமும்...

ஆனால், இந்த சட்டங்கள் தங்களுடைய நலன்களுக்கு எதிரானவை, தங்களை கார்ப்பரேட் என்னும் பெரு நிறுவனங்களின் பிடியில் சிக்க வைத்து விடும், தங்களது நிலங்கள் பெருநிறுவனங்களால் பறிக்கப்பட்டு விடும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை ஒழிக்கப்பட்டு விடும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

எனவே இந்த சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு உறைய வைக்கும் குளிருக்கு மத்தியிலும் கடந்த 36 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு அவர்களின் பிரதிநிதிகளோடு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும், முடிவு எட்டப்படாமல் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

இந்தநிலையில், விவசாயிகள் பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு கண்டுவிட வேண்டும் என்று கருதி பிரதமர் மோடி தொடங்கி மத்திய மந்திரிகள் பலரும், புதிய பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும் என்று தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தனர். இதையடுத்து 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் ஒருவழியாக சம்மதித்தனர்.
இந்த பேச்சுவார்த்தை 30-ந்தேதி (நேற்று) நடத்தப்படும் என என மத்திய அரசு அறிவித்தது. இதன்காரணமாக தலைநகரில் நேற்று நடத்தவிருந்த பிரமாண்ட டிராக்டர் பேரணியை விவசாயிகள் வியாழக்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

விறுவிறுப்பான பேச்சுவார்த்தை

இந்தநிலையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு டெல்லி விஞ்ஞான பவனில் 41 விவசாயிகள் அமைப்புகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான 6-வது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கி நடந்தது.

3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதற்கான நடைமுறைகள், குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கல் ஆகியவை உள்ளிட்ட முக்கிய அம்சங்களின் அடிப்படையில்தான் பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என்று விவசாயிகளின் அமைப்புகள் நிபந்தனை விதித்திருந்தன.

இந்த சூழலில் நடந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில் விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக ராஜாங்க மந்திரி சோம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை 2 மணி நேரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.

ஒன்றாக சாப்பிட்டனர்...
இதற்கிடையே விவசாயிகளுக்கு சமுதாய சமையல்கூடத்தில் இருந்து டீ, சிற்றுண்டிகள் வந்தன. அவற்றை அவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்த மந்திரிகளுடன் பகிர்ந்து சாப்பிட்டனர். சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. விவசாயிகள் முன்வைத்த ஒவ்வொரு அம்சத்தின் அடிப்படையிலும் இரு தரப்பிலும் விவாதித்தனர்.

இணக்கமான முறையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, 3 வேளாண் சட்டங்களைப் பற்றிய விரிவான தகவல்களை அரசு வழங்கியது.

2 அம்சங்கள்

விவசாயிகளின் அமைப்புகள் வைத்த 4 அம்ச கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டது. அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை ஜனவரி 4-ந்தேதி மதியம் 2 மணிக்கு நடத்துவது என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதையே காட்டுகிறது.

தோமர் பேட்டி
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் அமைப்புகள் வைத்த 4 அம்சங்களில், இரு அம்சங்களில் இரு தரப்பிலும் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. அந்த 2 அம்சங்களையும் அரசு ஏற்றுக்கொண்டு விட்டது.

முதல் அம்சம், சுற்றுச்சூழல் தொடர்பான அவசர சட்டம் ஆகும். இந்த சட்டம் குறித்து விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர். இந்த சட்டத்தில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிப்பது என்று இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது. எனவே வைக்கோல்களை எரிப்பதற்காக விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது.

இரண்டாவது அம்சம் மின்சார கட்டணம் தொடர்பானது. மின்சார சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்தால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திப்பார்கள் என்று கூறப்பட்டது. நீர்ப்பாசனத்துக்காக விவசாயிகளுக்கு மாநிலங்கள் வழங்கி வருகிற மானியம் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்கள். இதிலும் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலைமுறை

குறைந்தபட்ச ஆதரவு விலைமுறையை பொறுத்தமட்டில் அது தொடரும். ஆனாலும் இதில் மேலும் விவாதிக்க வேண்டியதிருக்கிறது. அது 4-ந்தேதி நடக்கிற அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும். அதில் நல்ல முடிவு ஏற்படும்.
இது தொடர்பாக எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்க அரசு தயாராகவே இருக்கிறது. ஆனால் இதற்கு சட்ட அந்தஸ்து வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. எனவே இது தொடர்பாக அடுத்த சுற்று பேச்சில் பேசப்படும்.

3 சட்டங்கள்

பேச்சு வார்த்தைகள் நல்ல சூழலில் முடிந்துள்ளது. 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று விவசாயிகள் அமைப்புகள் விரும்புகின்றன.

விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

டெல்லியில் கடும் குளிர் நிலவி வருகிறது. எனவே வயதானவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் விவசாய தலைவர்கள் ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை அரசு தரப்பில் வைத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ : https://tamildhamakanews.blogspot.com/2020/12/2021_30.html

விவசாயிகள் அமைப்பு கருத்து
பேச்சுவார்த்தை குறித்து அகில இந்திய கிசான்சபா தலைவர் ஹன்னன் மொல்லா கருத்து கூறும்போது, “பேச்சுவார்த்தை முறிந்துவிடவில்லை. அது தொடர்கிறது. 4 பிரச்சினைகளில் 2 பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மீதி 2 பிரச்சினைகளில் தீர்வு காணப்பட வேண்டும். ஒன்று குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரம், மற்றொன்று 3 சட்டங்களையும் ரத்து செய்யும் பிரச்சினை ஆகும்” என குறிப்பிட்டார்.

மற்றொரு விவசாயிகள் அமைப்பின் தலைவரான பிரேம்சிங் பாங்கு கருத்து தெரிவிக்கையில், “இன்றைய கூட்டம் இணக்கமாக நடைபெற்றது. எங்களோடு அவர்கள் சாப்பிட்டார்கள். டீ அருந்தினார்கள்” என கூறினார்.

இன்னொரு அமைப்பின் தலைவரான கல்வந்த் சிங் சந்து, “பேச்சுவார்த்தையில் மின்சார பிரச்சினை, வைக்கோல் எரிப்பு பிரச்சினை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. 4-ந்தேதி எஞ்சிய 2 பிரச்சினைகள் விவாதிக்கப்படும்” என கூறினார்.

விவசாயிகள் பிரச்சினையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது, அவர்களின் போராட்டத்தினால் அவதியுற்று வரும் டெல்லிவாசிகளுக்கு சற்றே நிம்மதியை அளித்துள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்