நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அய்யய்யோ! மாஸ்க மறந்துட்டோமே.... நாடாளுமன்ற கூட்டத்தில் முக கவசத்தை தேடி ஓடிய ஜெர்மனி பிரதமர்: வைரல் வீடியோ!

அய்யய்யோ! மாஸ்க மறந்துட்டோமே.... நாடாளுமன்ற கூட்டத்தில் முக கவசத்தை தேடி ஓடிய ஜெர்மனி பிரதமர்: வைரல் வீடியோ!

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நாடாளுமன்ற அவையில் முகக்கவசம் அணிய மறந்ததால், பதறி போய் மாஸ்க்கை தேடி ஓடிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின் தான் முக கவசம் அணியாமல் இருப்பதை உணர்ந்து, அதனை தேடி விரைந்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பரவி இருக்கும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முக்கிய நடவடிக்கையாக முகக் கவசம் அணிவது இருந்து வருகிறது.

இதன் காரணமாகவே உலக நாடுகள் அனைத்தும் பொதுவெளியில் வரும் குடிமக்கள் முகக்கவசம் அணியவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளன.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!