நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இலங்கையில் சீனாவின் தீவிர ஆதிக்கம்! தூக்கி எறியப்பட்ட தமிழ் மொழி

இலங்கையில் அண்மைய காலப்பகுதியில் சீன அரசாங்கத்தினதும், சீன மொழியினதும் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. சிங்களம், ஆங்கிலம், தமிழ் மொழி என எழுதப்பட்ட இடங்களில் தற்போது தமிழ் மொழியை காண முடியவில்லை.

இலங்கையில் தமிழ் மொழி அரசகரும மொழியாக கடந்த அரசாங்கத்தில் அங்கீகரிக்கப்பட்டது. எனினும் தற்போது தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதையும், அதற்கு பதிலாக சீன மொழி திணிக்கப்படுவதையும் காணலாம்.

இது தொடர்பில் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

கடந்த காலங்களில் இடங்களுக்குரிய பெயர் பலகையில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி எழுதப்பட்டு இருக்கும்.

ஆனால் தற்போது சிங்களம், ஆங்கிலம், சீன மொழி காணப்படுகின்றது. அதிலும் ஏனைய மொழிகளை விட சீன மொழியே மேலாக முதலில் எழுதப்பட்டுள்ளது.

பெயர் பலகை மாத்திரம் அல்லாது பேருந்துகளிலும் சீன மொழியே எழுதப்பட்டுள்ளது.

இலங்கையில் சீனர்களை விட ஏனைய மொழி பேசுபவர்களே அதிகமாக உள்ளனர். எனினும் சீன மொழிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பது கேள்விக்குரிய விசயமே.

அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றது என்பதை விடவும், தமிழ் மொழி முற்றிலும் தவறுதலாக எழுதப்பட்டுள்ளமை கவலைக்குரிய விசயமே.




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!