நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இஸ்ரோவின் மைல்கல் முயற்சியான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு பிரான்ஸ் உதவி - ஒப்பந்தம் கையெழுத்தானது

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு பிரான்ஸ் உதவுகிறது. இதற்காக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருக்கிறது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி ஆய்வில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ககன்யான் என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தை, நாடு விடுதலை பெற்ற 75-வது ஆண்டையொட்டி 2022-ம் ஆண்டில் நிறைவேற்ற வேகமாக பணிகள் நடந்து வருகின்றன.கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இந்த பணிகள் கொரோனா பொதுமுடக்கத்தால் தாமதமாகி வருகிறது. எனினும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிட இஸ்ரோ தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் இந்த மைல்கல் திட்டத்துக்கு பிரான்சின் உதவியை இஸ்ரோ நாடியுள்ளது. அதன்படி இஸ்ரோ மற்றும் பிரான்சின் விண்வெளி ஆய்வு நிறுவனமான சி.என்.இ.எஸ். இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருக்கிறது.

இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவு மந்திரி ஜீன்-வெஸ் லி டிரையன் நேற்று இஸ்ரோ தலைமை அலுவலகத்துக்கு செனறார். அப்போது இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த ஒப்பந்தப்படி ககன்யான் திட்டத்துக்கு பிரான்ஸ் பல்வேறு உதவிகளை வழங்கும். குறிப்பாக இந்திய விண்வெளி வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையங்களில் பயிற்சி அளிக்கப்படும்.


அத்துடன் உணவு பேக்கிங், ஊட்டச்சத்து திட்டம் பற்றிய தகவல்கள் பரிமாறுதல், சரிபார்ப்பு பணிகள் போன்றவற்றை சி.என்.இ.எஸ். மேற்கொள்ளும். எல்லாவற்றுக்கும் மேலாக பிரெஞ்சு உபகரணங்கள், நுகர் பொருட்கள் மற்றும் மருத்துவ கருவிகளை இந்திய வீரர்கள் பயன்படுத்துவது தொடர்பான அறிவியல் பூர்வ பரிசோதனை திட்டத்தை சி.என்.இ.எஸ். செயல்படுத்தும்.

சி.என்.இ.எஸ். உருவாக்கி சோதித்து சர்வதேச விண்வெளி மையத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் கருவிகள் இந்திய வீரர்களுக்கும் கிடைக்கும். இதைப்போல அதிர்வுகள், கதிரியக்கம் போன்றவற்றை தாங்குவதற்காக பிரான்சில் தயாரிக்கப்பட்ட தீப்பிடிக்காத பைகளை இந்திய வீரர்களுக்கு சி.என்.இ.எஸ். வழங்கும்.

இந்த ஒப்பந்தத்தில் பிரான்ஸ் வழங்கும் ஒத்துழைப்பை எதிர்காலத்துக்கும் நீட்டிக்க முடியும். குறிப்பாக பெங்களூருவில் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் பிரான்சின் உதவியை பெற முடியும் என சி.என்.இ.எஸ். தெரிவித்து உள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!