நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இதய பராமரிப்பு, எடை குறைப்பு… தெரிந்த கத்தரிக்காய்; தெரியாத பயன்கள்

கத்தரிக்காய் சிவப்பு ரத்த செல்களின் உற்பத்தியை ரத்தத்தில் அதிகரிக்கிறது.
இங்கிலாந்தின் அவுபிரிஞ்ச் இந்தியாவில் கத்தரிக்காய் என்றழைக்கப்படுகிறது. இது நைட்ஷேட் என்ற தாரவியல் வகையைச் சேர்ந்தது. ஊதா நிறக் கத்தரிக்காய்கள் உலகம் முழுவதுமிருந்தாலும் குறிப்பிடும்படி அமெரிக்காவில் அதிகம் காணப்படுகிறது. கத்தரிக்காய் இந்தியா முதல் பர்மா, சீனா வரை பல நாடுகளுக்கு சொந்தமானது. கத்தரிக்காய் ஒரு காய் வகை என்று கருதப்பட்டாலும், இது உண்மையில் சுவையான உணவாக சமைக்கப்படும் ஒரு பழமாகும். உயிரியல் ரீதியாக பழம் என்றாலும் சமையலில் கத்தரிக்காய் காய் வகையாகவே உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் சற்று கசப்பான சுவை பலரால் விரும்பப்படாதது என்றாலும் ஆரோக்கியமான பல நன்மைகளை இது உள்ளடக்கியுள்ளது. இதில் வைட்டமின் சி, கே, பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் ஃபைபர்கள் உள்ளடக்கியது. மேலும் கத்தரிக்காயின் இலைகள் மற்றும் வேர்கள் பலவகையான தொற்றுகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது:

இதய ஆரோக்கியத்திற்கு கத்தரிக்காய் சிறந்தது, கெட்ட கொழுப்புகளை அகற்றி எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது. சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது. சீரற்ற உணவினை எடுத்துக்கொள்ளும்போது உடலில் கொழுப்பு அளவும் சீரற்றதாக மாறும். உடலில் இருக்கும் நல்ல கொழுப்பு சீரான கொழுப்பை தக்கவைக்கும்.

இயற்கை மலம் இளக்கி:

கத்தரிக்காயில் அதிகம் உள்ள ஃபைபர் , ஜீரண சக்தியைத் தூண்டி எளிதில் உணவினை செரிக்கவைக்கும். இதனால் கத்தரிக்காய் உடலில் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. நீர் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்களுடன் சேரும்போது செரிமான அமைப்பிலுள்ள அழற்சிகளை நீக்கி மலச்சிக்கலை போக்குகிறது.

எடையை குறைக்கும்:

கத்தரிக்காயிலுள்ள சபோனின் எனப்படும் கிளைக்கோசைடுகள் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுத்து உடலில் ஏற்கெனவே உள்ள கெட்ட கொழுப்புகளை உறிஞ்சுகிறது. இதனால் உடல் எடையைக் குறைக்கும் சுழற்சியில் கத்தரிக்காய் பெரிதும் உதவுகிறது. கத்தரிக்காயிலுள்ள குறைந்த கார்போஹைட்ரேடுகளும், கலோரிகளும் எடை குறைக்கும் செயல்முறைக்கு உதவுகின்றன.

உயர்ந்த ஆக்ஸிஜனேற்றி:

அந்தோசையின் எனும் ஆக்ஸிஜனேற்றியே கத்தரிக்காயின் ஊதா நிறத்திற்கு காரணம். இவை நமது உடலை புற்றுநோய் செல்கள் மற்றும் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாக்கிறது.

அனிமியாவிலிருந்து பாதுகாக்கிறது:

கத்தரிக்காய் சிவப்பு ரத்த செல்களின் உற்பத்தியை ரத்தத்தில் அதிகரிக்கிறது. பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படும் அனிமியா அல்லது இரும்புச்சத்து குறைபாடு போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது. மேலும் கத்தரிக்காயிலுள்ள காப்பர் அதிக அளவிலான சிவப்பு ரத்த செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதனால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதையும் காண இயலும்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!