நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Maggie Laddu: இணையத்தில் செம trend ஆகி கமெண்டுகளையும் லைக்குகளையும் அள்ளும் மேகி லட்டு

 மேகிக்கு வயது வரம்பு இல்லாமல் ரசிகர்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைத்து வயதினரும் மேகியை விரும்புகிறார்கள்.


மேகிக்கு வயது வரம்பு இல்லாமல் ரசிகர்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைத்து வயதினரும் மேகியை விரும்புகிறார்கள். இதுவரை மேகியின் பல வடிவங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 


'தயிருடன் மேகி', 'பியருடன் மேகி' என பல வகைகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இன்று இணையத்தை ஒரு கலக்கு கலக்கிய ஒரு மேகி (Maggie) வகையைப் பற்றி இந்த பதிவில் உங்களுக்கு சொல்லப் போகிறோம். 


சமூக ஊடகங்களில் மேகி லட்டு 

ஒரு பயனர் மேகி கொண்டு லட்டு செய்து அந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் (Social Media) பகிர்ந்துள்ளார். இப்போது இந்த புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு பயனர்கள் பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

ட்விட்டரில் (Twitter), சுகர் கப் என்ற பயனர் தனது கணக்கில் மேகி லட்டுவின் படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகப்படத்துக்கு மேலே, தலைப்பில் அவர், "நண்பர்களே, யாரோ மேகி லட்டு செய்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்துளார்கள்" என்று எழுதியுள்ளார். 


லட்டு செய்முறையை சொல்லவில்லை

இந்த படத்தை பார்த்த பிறகு, இந்த லட்டுவை எப்படி செய்ய வேண்டும் என அனைவரது மனதிலும் கேள்வி எழும். ஆனால் வைரலான அந்த போஸ்டில் லட்டு தயாரிக்கும் முறை பகிரப்படவில்லை. ஆனால், இந்தப் படத்தைப் பார்க்கும்போது, ​​பசையான மேகி நூடுல்சை வெல்லத்துடன் கலந்து லட்டுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், செய்முறை எப்படி இருந்தாலும், இந்த மேகி லட்டு குறித்து சமூக ஊடகங்களில் வரும் கமெண்டுகள் வேடிக்கையாக இருக்கின்றன. 


உங்கள் பார்வைக்கு சில கமெண்டுகள் இதோ:





ALSO READ : வயிற்று வலியா? மாத்திரை வேண்டம், பாட்டி சொன்ன வீட்டு வைத்தியங்கள் இதோ

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!