நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முடி கரு கருனு அடர்த்தியா வளர கண்டதையும் தேய்க்காம இந்த ஒரே ஒரு பொருளை போடுங்க... இனி 2 மடங்காக அதிகரிக்கும்!

முடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்ய நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்துங்கள்.

இது குறித்து விரிவான பார்க்கலாம்.

வெங்காயம்

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். வெங்காயத்தின் சாறு அதில் நன்கு இறங்கியதும் தலையில் தேய்த்து மசாஜ் செய்து அலசினால் முடி அடர்த்தியாக வளரும்.
முக்கிய குறிப்பு
முடி வளர்ச்சி அதிகரிக்க தலைமுடியின் வேர்க்கால்களைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
அதனால் தேங்காய் மற்றும் விளக்கெண்ணெய் சம அளவு எடுத்து சூடாக்கி வெதுவெதுப்பான நிலையில் தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளியுங்கள்.
மாதம் 2 முறை இதை செய்து வர முடி வளர்ச்சி இருமடங்காக அதிகரிக்கும்.
வெதுவெதுப்பான எண்ணெயைத் தலையில் தேய்ப்பதால் முடியின் வேர்க்கால்கள் பலம் பெறும். ஊட்டச்சத்துக்களை முடிக்குக் கொடுத்து முடியின் வளர்ச்சியைத் தூண்ட ஆயில் மசாஜ் உதவுகிறது.
ஏனெனில் ஆயில் மசாஜ் செய்யும்போது தலைமுடியின் சருமத் துளைகள் திறந்து கொள்ளும்.
அதில் எண்ணெய் இறங்குவதால் தலைமுடிக்குப் போதிய நீர்ச்சத்தும் ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. 




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்