சாம்பார் உடலுக்கு இவ்வளவு ஆரோக்கியம் கொடுக்குமா? அடுக்கடுக்கான நன்மைகள்...
- Get link
- X
- Other Apps
சாம்பார் ஒரு அருமையான குறைந்த கலோரி கூட்டமைப்பில் உருவான உணவாகும். பல்வகை ஊட்டச்சத்துகளும் ஒருங்கிணைந்த ஒரு உட்கொள்ளல் தான் இந்த சாம்பார்.
சாம்பார் மாற்றும் சாம்பார் சாதம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்க பெறுகின்றன.
இது ஒரு குறைந்த கலோரி உணவு என்பதால் எடை குறைப்பு செய்ய விரும்புவோர் கூட இதை அவர்கள் மெனுவில் சேர்த்து கொள்ளலாம்.
சாம்பார் செய்ய பயன்படும் பருப்பு நீரை எடுத்து 7 மாத குழந்தைக்கு கூட ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து பருக கொடுக்கலாம்.. பெரும்பாலும் குழந்தைகளின் முதல் திட உணவு பருப்பு சாதமாகத்தான் இருக்கும். இந்த சாம்பாருடன் நெய் கலந்து குழந்தைக்கு கொடுக்கும் போது குழந்தை போஷாக்குடன் வளரும்.
இதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது மற்றும் ஒவ்வொன்றின் நன்மைகளும் ஏராளம் . இதில்சேர்க்கப்படும் முக்கிய பொருளான பருப்பில் புரத சத்து அதிகமாக இருக்கிறது. காய்கறிகள் அதிகமான நார்ச்சத்து கொண்டவை.
இவற்றிற்கு தாளிப்பாக ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்ப்பது கொழுப்பு சத்துக்காக. இப்படி ஒரு நாளில் நமக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும் ஒரு உணவில் கிடைப்பது நமக்கு ஒரு வரமாகும்.
ALSO READ : உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்கும் பழம்...இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment