நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சீன பெருஞ்சுவர் வரலாறை விடுங்க சூயிங் கம் சுவர் கேட்டதுண்டா? இதோ அதன் வரலாறு....

 2015 இல் சுத்தப்படுத்தும் வேலை 130 மணிநேரம் நடைபெற்றது. அதில் சுமார் 2,350 பவுண்டுகள் பழைய மற்றும் புதிய கோந்துகள் அகற்றப்பட்டன. ஆனால் மீண்டும் கோந்துகளால் நிறைந்துவிட்டன.


முந்தைய காலம் முதல் இன்றைய காலம் வரை சூயிங் கம் எனப்படும் மெல்லும் கோந்து என்றாலே இளைஞர்களுக்கு ஒரு ஈர்ப்பு தான். ஆனால் அதை வாயில் போட்டு மணிக்கணக்கில் மென்று விட்டு சாலையிலும், அமரும் பெஞ்ச் அடிகளில் ஒட்டிவிட்டு போய்விடுவர். கையும் காலிலும் பட்டு பிசு பிசுக்கும்.


வீட்டில் கோந்து சாப்பிட்டு ஏதாவதில் ஓட்டும் படி இருந்துவிட்டால் அம்மா போடாத போடு போட்டுவிடுவார். அதும் சுவரில் எங்கேயும் பட்டு விட்டால் அவ்வளவு தான். ஆனால் அமெரிக்காவில் ஒரு சுவரே கோந்தால் நிறைந்துள்ளது.


அமெரிக்கா சியாட்டல் பகுதியில் ஒரு சுவர் இந்த பபுல் கம்மை ஓட்ட வைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 1990 களில் எப்போது எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை என்றாலும் 30 ஆண்டுகளாக இந்த பழக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.


'கம் வால்' என்பது டவுன்டவுன் சியாட்டிலில் உள்ள பைக் பிளேஸ் மார்க்கெட்டின் ஒரு செங்கல் சுவர் ஆகும். இது 1வது அவென்யூவில் இருந்து பைக் தெருவிற்கு அருகில் உள்ள போஸ்ட் ஆலியில் அமைந்துள்ளது. இந்த சுவர் சுமார் 15 அடி (4.6 மீ) உயரம் 50-அடி நீளம் (15 மீ) கொண்டது. மார்க்கெட் அருகில் இருந்த தியேட்டரின் ஒரு பக்க சுவர் கம் வால்லாக 1990 களில் தற்செயலாக உருவாக்கப்பட்டதிலிருந்து ஒரு சுற்றுலா தலமாகவும் உள்ளூர் அடையாளமாகவும் மாறியுள்ளது.


பல இன்ச் அடர்த்திக்கு இந்த சுவரின் மீது பபுல் கம்கள் ஒட்டப்பட்டுள்ளன. 1990 கள் முதல் இன்று வரை இந்த சுவரை ஒரு முறை மட்டுமே சுத்தம் செய்துள்ளனர். நவம்பர் 2015 இல், பைக் பிளேஸ் சந்தை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஆணையம் சுவரில் இருந்து அனைத்து பசைகளையும் அகற்றினர். சுத்தப்படுத்தும் வேலை 130 மணிநேரம் நடைபெற்றது. அதில் சுமார்  2,350 பவுண்டுகள் பழைய மற்றும் புதிய பபுல் கம்கள் அகற்றப்பட்டன.


ஆனால் சுத்தம் செய்த நாளே மீண்டும் பபுல்கம்கள் ஒட்ட ஆரம்பித்தனர். சுத்தம் செய்யும் எண்ணத்தை அரசு விட்டு விட்டது. கைக்கு எட்டும் அளவிற்கு 50 அடி நீளத்திற்கு முழுவதும் வெறும் பபுல்கம்கள் தான் கண்ணில் படும். இதோடு நாணயங்களையும் ஒட்டிவைத்துச் செல்வர். பபுள்கம்களில் தங்கள் கலை நயத்தையும் இணைத்து பல்வேறு நிறங்களில் பல்வேறு வடிவங்களில் ஒட்டிசெல்வர்.


முப்பது வருடங்களாக இந்த வினோத பழக்கம் இந்த ஊரிலும் இந்த சுவரிலும் இருந்து வருகிறது. சியாட்டல் பக்கம் போனால் இந்த சுவரை பார்க்க மறந்துவிடாதீர்கள். கொஞ்சம் துர்நாற்றம் வீசும் என்றாலும் 10 வருட கோந்துகளின் கலை ஓவியத்தை காண வாய்ப்பு கிடைக்காதல்லவா…




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!