நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பாகுபலி ராஜமாதா போல் தனது குழந்தையை மக்களுக்கு காட்டிய கொரில்லா - வைரல் வீடியோ...

 Viral Video | இந்த வீடியோவில் மிருகக்காட்சி சாலைக்கு வரும் மக்களுக்கு தனது குழந்தையை அன்போடு அறிமுகப்படுத்துகிறது இந்த கொரில்லா.


மனிதர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை நேசிக்கிறார்கள், கவனித்துக்கொள்கிறார்கள் என்று அனைவரும் ஒரு நினைப்பு இருக்கலாம். ஆனால் அது அவ்வாறு இல்லை, விலங்குகளும் தங்கள் குழந்தைகளை மனிதர்களை போல் மிகவும் நேசிக்கின்றன மற்றும் பாதுகாக்கின்றன என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் தற்போது சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அந்த விடியோவில் கொரில்லா ஒன்று தனது குழந்தையை கவனித்து கொள்ளும் முறை அப்படியே மனிதர்களை போலவே மிகவும் இயல்பாக அன்பாக உள்ளது. அந்த பாசத்தை பார்க்கும்போது ​​​​இது மனிதர்களிடமிருந்து வேறுபட்டதல்ல என்பதை நீங்கள் உணருவீர்கள்.

இன்ஸ்டாகிராமில் ViralHog என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த விடியோ இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது, மேலும் அனைவராலும் விரும்பப்படும் இந்த விடியோவானது இதுவரை 21 ஆயிரம் லைக்களையும் கடந்துள்ளது. இந்த வீடியோவில் மிருகக்காட்சி சாலைக்கு வரும் மக்களுக்கு தனது குழந்தையை அன்போடு அறிமுகப்படுத்துகிறது இந்த கொரில்லா.

இந்த கொரில்லாவின் அறிமுகத்தை பார்த்தாலே 'பாகுபலி' படத்தின் அந்த காட்சிதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும், அதில் 'அமரேந்திர பாகுபலி' இறந்த பிறகு 'ராஜ்மாதா சிவகாமி தேவி' 'மகேந்திர பாகுபலி'யை கையில் தூக்கி மக்களுக்கு அறிமுகப்படுத்துவார் அல்லவா அதே போல் தான் இந்த கொரில்லாவும் மக்களுக்கு தனது குழந்தையை கையில் தூக்கி காட்டுகிறது.

தனது குழந்தையின் நெற்றியில் அன்போடு முத்தமிடும் கொரில்லா:
இந்த வீடியோவானது கனடாவில் உள்ள கல்கரி மிருகக்காட்சிசாலையில் எடுக்கப்பட்டது ஆகும். இதில் ஒரு பெண் கொரில்லா கண்ணாடி கூண்டுக்குள் அமர்ந்து தனது குழந்தையை மடியில் வைத்து கொஞ்சுகிறது. இதை பார்க்க கூண்டின் அருகில் மக்கள் வந்து நின்றவுடன், கொரில்லா தனது குழந்தையின் இரு கைகளையும் பிடித்து காற்றில் தூக்கி மக்களுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்குகிறது. பிறகு குழந்தை கொரில்லாவை தன் மடியில் வைத்துக்கொண்டு அதற்கு அன்பாக நெற்றியில் முத்தமிடுகிறது தாய் கொரில்லா.

இந்த உணர்ச்சிப்பூர்வமான விடியோவை பார்த்த பலரும் தங்களது தனிப்பட்ட கருத்துக்களைக் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். அதில் ஒரு பார்வையாளர் மிருகக்காட்சி சாலையில் விலங்குகளை வைத்திருப்பதற்கு பதிலாக, அவற்றை சுதந்திரமாக விட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஒருவர் கூண்டுகளில் விலங்குகளைப் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது, அவை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று பகிர்ந்துள்ளார். கொரில்லாவைப் பார்த்ததும் மருத்துவமனையில் இருக்கும் செவிலியரின் நினைவு வருகிறது என்றார் ஒருவர். அதே சமயம் இது மிருகக்காட்சி சாலை அல்ல சிறை என்று கூறினார். விலங்குகள் ஏன் தங்கள் குழந்தைகளை இவ்வளவு வன்முறையாக நடத்துகின்றன என்று கேலியாக ஒரு பெண் கேட்டுள்ளார்.


ALSO READ : உலகின் கடைசி செல்ஃபி எப்படி இருக்கும்.? வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்