நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Gmail-ல் இதை செய்யவில்லை என்றால் ரூ. 2100 செலவு!

 ஜி-மெயில் பயன்பாடு மிகவும் முக்கியமான ஒன்று, இதில் குவிந்து கிடக்கும் பல தேவையற்ற மெயில்களால் உங்களுக்கு ஸ்டோரேஜ் பாதிப்புகள் ஏற்படக்கூடும் .


ஜி-மெயிலில் இருக்கும் தேவையில்லாத பழைய மெயில்களை அடிக்கடி டெலீட் செய்வது நல்லது, ஏனெனில் அதிகளவில் பழைய மெயில் இருப்பதால் கூகுள் உங்களுக்கென்று நிர்ணயம் செய்துள்ள இலவச ஸ்டோரேஜின் அளவு பாதிக்கப்படும்.  


கூகுள் மொத்தமாக 15ஜிபி ஸ்டோரேஜை வழங்குகிறது, இந்த 15 ஜிபி-யும் உங்களுக்கு போதுமானதாக இல்லையென்றால் ஒவ்வொரு ஆண்டும் ரூ.2,100 கட்டணம் செலுத்தி நீங்கள் 200 ஜிபி வரையிலான ஸ்டோரேஜை பெற்றுக்கொள்ள வேண்டும்.  


தேவையில்லாமல் பணத்தை செலவழிக்காமல் Filters For Auto-Deletion என்கிற ஆப்ஷனை பயன்படுத்தி தேவையில்லாத மெயில்களை டெலீட் செய்து இலவச ஸ்டோரேஜை பயன்படுத்தி கொள்ளலாம்.  


தேவையில்லாத ஐடியில் இருந்து வரும் மெயில்களை தேர்வு செய்வதன் மூலம் அவை ஆட்டோமெட்டிக்காகவே டெலீட் ஆகிவிடும், உங்களுக்கு ஸ்டோரேஜும் கிடைக்கும்.



ALSO READ : வரலாற்றில் பாழடைந்த இடங்களின் அரிய புகைப்படங்கள்....


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்